எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 மார்ச், 2012

TOMATO RICE.(1) . தக்காளி சாதம் (1)


TOMATO RICE:-
NEEDED:-
COOKED RICE - 2 CUPS.
TOMATO LARGE - 5 NOS
BIG ONION - 2 NOS
GREEN CHILLIES - 2 NOS
RED CHILLIES - 2 NOS
RED CHILLY POWDER - 1/2 TSP
DHANIYA POWDER - TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TBLSPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 2 TSP
CHANNA DHAL - 2 TSP
ASAFOETIDA - 1/10 INCH PIECE
CURRY LEAVES - 1 ARK.
SALT - 1 TSP

METHOD :-
PEEL ,WASH AND CHOP THE ONIONS. WASH AND CHOP THE TOMATOS. HEAT OIL IN A PAN ADD MUSTARD , WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, CHANNA DHAL , ASAFOETIDA, THEN ADD SLIT OPENED GREEN CHILLIES , HALVED RED CHILLIES & CURRY LEAVES. THEN ADD CHOPPED ONION AND TOMATO AND SAUTE WELL . ADD RED CHILLI POWDER, DHANIYA POWDER, TURMERIC POWDER AND SALT. STIRR WELL AND COOK FOR 5 MINUTES. WHEN THE OIL SEPERATES AT THE SIDES REMOVE FROM FIRE AND LET IT COOL. ADD THE COOKED RICE AND MIX WELL WITH A LADDLE. SERVE IT WITH PAPADS OR POTATO FRY OR CHIPS.


தக்காளி சாதம்:-
தேவையானவை:-
சாதம் - 2 கப்
தக்காளி பெரிது - 5
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 2
மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
எண்ணெய் - டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/10 இன்ச்துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு.
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து கழுவி பொடியாக நறுக்கவும். தக்காளிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கடலைப் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை போடவும். பின் பச்சை மிளகாய், வரமிளகாயைக் கிள்ளிப் போடவும். அதில் வெங்காயம், தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். சுற்றிலும் எண்ணெய் பிரிந்து வருகையில் இறக்கி ஆற விடவும். சாதத்தைப் போட்டுக் கரண்டியால் நன்கு கிளறி அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல் அல்லது சிப்ஸுடன் பரிமாறவும்.

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...