எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 செப்டம்பர், 2012

SMALL ONION GARLIC MANDI.. சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு மண்டி.

SMALL ONION GARLIC MANDI:-
NEEDED:-
SMALL ONION – 1 CUP ( PEELED & HALVED)
GARLIC – 1/3 CUP ( PEELED AND HALVED)
GREEN CHILLIES – 1/3 CUPS ( HALVED)
RICE RINSED WATER – 3 CUPS ( THICK)
TAMARIND – 1 LEMON SIZE BALL
SALT – 1 TSP
OIL – 1 TBLSPN
MUSTARD – 1 TSP
ORID DHAL – 1 TSP
FENUGREEK – 1/3 TSP
JEERA – 1/3 TSP
ASAFOETIDA – 1/8 INCH PIECE.
CURRY LEAVES – 1 ARK
JAGGERY – 1/2TSP ( FOR TASTE)

METHOD :-
SOAK TAMARIND IN RICE RINSED WATER. SQUEEZE WELL AND ADD SALT. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, FENUGREEK,JEERA, ASAFOETIDA AND CURRY LEAVES. THEN ADD SMALL ONION, GARLIC, CHILLIES. SAUTE WELL. POUR THE TAMARIND WATER. BRING TO BOIL. THEN SIMMER FOR 20 MINUTES BY COVERED WITH A LID. ADD JAGGERY AND COOK FOR 2 MORE MINUTES OR TILL THE OIL SEPERATES AT THE SIDES. SERVE HOT WITH CURD RICE , IDDLIE,CHAPPATHI.

NOTE.:- FOR ADDITIONAL TASTE AND FLAVOUR :- FRY 1 TSP FENUGREEK, 1 TSP RAW RICE AND 1/8 INCH ASAFOWTIDA & AND POWDER AND ADD IT ALONG WITH JAGGERY.

சின்னவெங்காயம் வெள்ளைப்பூண்டு மண்டி:-
தேவையானவை:-
சின்னவெங்காயம் – 1 கப் ( உரித்து இரண்டாக நறுக்கவும்)
வெள்ளைப் பூண்டு – 1/3 கப்(உரித்து இரண்டாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 1/3 கப் ( இரண்டாக நறுக்கவும்.)
அரிசி களைந்த தண்ணீர் – 3 கப்.
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/3 டீஸ்பூன்
ஜீரகம் – 1/3 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/8 இன்ச் துண்டு
கருவேப்பிலை – 1 இணுக்கு
வெல்லம் – ½ டீஸ்பூன்( ருசிக்கு)

செய்முறை:-
அரிசி களைந்த தண்ணீரில் புளியை ஊறவைக்கவும். நன்கு கரைத்து உப்பை சேர்க்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், ஜீரகம், பெருங்காயம், கருவேப்பிலை போடவும். சின்னவெங்காயம், வெள்ளைப்பூண்டு, பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்,கொதி வந்ததும் சிம்மில் 20 நிமிடம் மூடி போட்டு வைக்கவும். வெல்லத்தைச் சேர்த்து எண்ணெய் பக்கங்களில் பிரிந்ததும் இறக்கவும்.

குறிப்பு:- அதிக சுவைக்கும் வாசனைக்கும் :- ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் பச்சரிசி, 1/8 இன்ச் துண்டு பெருங்காயம் வறுத்து பொடி செய்து வெல்லம் சேர்க்கும்போது போட்டு இறக்கவும்.

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...