எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 25 ஜூலை, 2014

THAVALAI VADAI .தவலை வடை. குங்குமம் தோழியில்

THAVALAI VADAI .தவளை வடை. 

 THAVALAI VADAI:-

NEEDED:-
RAW RICE - 50 GMS
BOILED RICE - 50 GMS
ORID DHAL - 50 GMS
THUVAR DHAL - 50 GMS
CHANNA DHAL - 50 GMS
MOONG DHAL - 50 GMS
SAGO - 50 GMS
RED CHILLIES - 4 NOS
SOMPH ( ANISEEDS) - 1 TSP
GRATED COCONUT - 1 CUP
BIG ONION - 1 CHOPPED
SALT - 1 1/2 TSP
MUSTARD - 1 TSP
OIL - FOR FRYING

METHOD:-

WASH AND SOAK RICE AND DHALS. POWDER RED CHILLIES, SOMPH WITH SALT. ADD THE SOAKED RICE AND DHAL AND GROUND COARSLY. HEAT 1 TSP OIL IN A PAN ADD MUSTARD,. WHEN IT SPLUTTERS ADD ONION & SAUTE WELL. ADD GRATED COCONUT AND STIRR WELL. MIX IT WITH THE BATTER. HEAT OIL IN A PAN. DROP ONE SPOON BATTER IN OIL BY USING A SMALL CURVY LADDLE. FRY VADAIS CRISPLY AND SERVE HOT WITH COCONUT CHUTNEY OR KATHAMBA CHUTNEY.

தவளை வடை:-

தேவையானவை:-
பச்சரிசி - 50 கிராம்
புழுங்கரிசி - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
ஜவ்வரிசி - 50 கிராம்
வர மிளகாய் - 4
சோம்பு ( பெருஞ்சீரகம்) - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்.
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

அரிசி பருப்புக்களை நன்கு கழுவி ஊறவைக்கவும். மிளகாய் , சோம்பு, உப்பை பொடியாக்கவும். அத்துடன் அரிசி பருப்பு ஜவ்வரிசி சேர்த்து அரைக்கவும். ஒரு பானில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து அதில் வெங்காயத்தை நன்கு வதக்கவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டுப் பிரட்டி அரைத்த மாவில் கொட்டி நன்கு கலக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு சின்ன குழிவான கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னி அல்லது கதம்பச் சட்னியுடன் சுடச் சுடப் பரிமாறவும்.

4 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...