எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூன், 2016

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப். - கோகுலம் GOKULAM KIDS RECIPES.

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா ிர் சூப்:-

தேவையானவை:-
(ஒரு கட்டு கருவேப்பிலை, ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்துமல்லியில்) ஆய்ந்த தளிர் இலைகள் மட்டும். – தலா ஒரு பெரிய கைப்பிடி. அளவு எடுத்து அலசி வைக்கவும், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1 , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, இலை – 1, கல்பாசிப்பூ -1, சோம்பு -1/2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

செய்முறை:-
பெரிய வெங்காயம் தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆய்ந்து கழுவிய தளிர் இலைகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள் உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.ஆறியதும் திறந்து பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு  நன்கு மசித்து அந்தச் சாறை வடிகட்டி எடுக்கவும். திரும்ப ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வடிகட்டவும். பருப்பும் வெங்காயமும் தக்காளியும் கரைந்து வரும்வரை இன்னும் அரை கப் தண்ணீர் கூட ஊற்றி வடிகட்டி எடுக்கலாம். வடிகட்டிய இரண்டரை கப் சூப்பில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இறக்கி பாலும் மிளகுத்தூளும் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.

ரொம்ப எனர்ஜி தரும் வாசனையான சூப் இது. அசதி போக்கும். தூக்கம் போக்கி சுறுசுறுப்பை அளிக்கும். பசியைத் தூண்டும். வயிறு மந்தம், கண் பார்வை குறைபாடு ஆகியன போக்கும். கொழுப்புச் சத்தைக் கரைக்கும். சூப்பாக வேகவைத்துக் குடிப்பதால் கீரைகளின் உடனடிப் பயன் அப்படியே சிதைவுறாமல் கிடைக்கும். நீர்ச்சத்து அடங்கி உள்ளதால் தாகவிடாயைத் தீர்க்கும்.

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா இலைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.அனீமியாவைப் போக்குகிறது. இதயம், ஈரல், செரிமானம், முடி வளர்ச்சி ஆகியவற்றுக்கு உதவுகின்றது. பரிட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கான எனர்ஜி சூப் என்றும் சொல்லலாம்.

கருவேப்பிலையில் விட்டமின் ஏ உள்ளது. 1 சதம் கொழுப்புச் சத்தும், 6.1 சதம் புரதம், 4 சதம் தாது உப்பும், நார்ச்சத்துகளும் மாவுச்சத்துகளும் , மக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம், கந்தகம், க்ளோரின், ஆக்ஸாலிக் ஆசிட் ஆகியனவும் உள்ளன.

சிலண்ட்ரோ, சைனீஸ் பார்ஸ்லி என்றழைக்கப்படும் கொத்துமல்லியில் விட்டமின் ஏ, கே மற்றும் கால்சியம் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றது. ஒமேகா - 6 ஃபாட்டி ஆசிட் சிறிய அளவில் இருக்கிறது.

விட்டமின் ஏ ,சி, ஃபோலேட், கால்சியம் பொட்டாசியம் மக்னீசியம்  அதிக அளவிலும் ஒமேகா 3 , 6 ஃபாட்டி ஆசிட்டுகள் சிறிய அளவிலும் காணப்படுகின்றன. 

உடல் எடையைக் குறைப்பதோடு தேவையான ஊக்கச் சத்தையும் வழங்கும் இந்த சூப்பை பரிட்சை நாட்களில் அருந்திவந்தால் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பும் படிப்பில் உற்சாகமும் ஏற்படும்.

ுழந்தைகே சூப்பைக் குடிங்க. சூப்பாப் பிங்க. !டிஸ்கி :- பரிட்சை ஒண்ணும் பூதம் இல்லை என்ற கவிதைக்கு வாசகர் கடிதம். ! நன்றி தேஜஸ்வி & கோகுலம். :) 1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...