எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூலை, 2018

அப்பளம்.

அப்பளம்.

தேவையானவை :- உளுந்தம்பருப்பு - அரை கிலோ, உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறு கட்டி, தண்ணீர் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை :- உளுந்தம்பருப்பை மிஷினில் அரைத்து சலிக்கவும். பெருங்காயத்தைத் தண்ணீரில் ஊறப்போடவும். உப்பையும் போட்டு கரைத்து மாவில் சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகப் பிசையவும். மாவு ஒன்று சேர்ந்ததும் தண்ணீர் ஊற்றாமல் சப்பாத்திக் கல்லில் போட்டு குழவியால் எண்ணேய் ஊற்றித் தடவித் தட்டவும். நன்கு ரப்பர் பதம் வரும்வரைதட்டி மெல்லிசாக நீளமாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு கார்க் அளவு துண்டுகள் வெட்டி எடுத்து வைக்கவும். ஒவ்வொரு துண்டையும் சப்பாத்திக் கல்லில் போட்டு லேசாக அரிசி மாவு தடவி தேய்க்கவும். இவை ஒரு பூரி அளவு வரும். இரண்டு அப்பளங்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றை வைத்துத் தேய்த்து நன்கு  பெரிய அப்பளமாகத் திரட்டவும்.

அதிகம் வெய்யில் படாமல் நிழலில் வெப்பம் படும் அளவு உலர்த்தவும். இவற்றை எண்ணெயை நன்கு காயவைத்துப் பொரிக்கவும். மிக சுவையான அப்பளங்கள் தயார். :) 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...