எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தக்காளிப் பச்சடி.

தக்காளிப் பச்சடி. :-

தேவையானவை :-

வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, சாம்பார் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- தக்காளி வெங்காயத்தைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயத்தூளைப் போடவும். அதில் பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளித்து தக்காளி, வெங்காயத்தைப் போட்டு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் போட்டு வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். பாதி வெந்ததும் துவரம்பருப்பைச் சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி சாதத்தோடு பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...