எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

14.வான்கோழி பிரியாணி

14.வான்கோழி பிரியாணி


தேவையானவை:- வான்கோழி – அரை கிலோ, பாசுமதி அரிசி – அரைகிலோ, வெங்காயம் – 2, தக்காளி 2,  பச்சைமிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன், தயிர் – அரை கப், கொத்துமல்லி புதினா – ஒரு கைப்பிடி பொடியாக அரிந்தது, பாதாம் 4, கசகசா – 1 டீஸ்பூன் , தேங்காய்ப்பால் – அரை கப், எண்ணெய் + நெய் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சோம்புத்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டேபிள்ஸ்பூன், கிராம்பு ஏலக்காய் – தலா 4, பட்டை பிரிஞ்சி இலை 1, உப்பு – 1 டீஸ்பூன்., வறுத்த முந்திரி கிஸ்மிஸ் – தலா 8. எலுமிச்சை சாறு – சில துளிகள்.

செய்முறை:- அரிசியைக் களைந்து உப்பும் சிறிது நெய்யும், கொத்துமல்லி புதினாவும் போட்டு அரை வேக்காடாய் வேகவைத்து வடித்து வைக்கவும். வான்கோழிக்கறியில் பச்சைமிளகாய், தயிர், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலா, கொத்துமல்லி புதினா இவை சிறிது போட்டு நன்கு பிரட்டி ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோலுரித்துக் கசகசாவோடு சேர்த்து நன்கு அரைக்கவும். குக்கரில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து நீளமாக அரிந்த வெங்காயம் தக்காளியை வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும். இஞ்சிபூண்டு சிவந்ததும் மிச்ச மசாலாப் பொடிகள், தயிர், உப்பு, மஞ்சள் தூள், புதினா கொத்துமல்லித்தழைகள் சேர்த்து நன்கு கலந்து ஊறவைத்த வான்கோழியைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கி எண்ணெய் பிரியும்போது பாதாம் கலவை, தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து மூடவும். குக்கரில் 3 விசில்கள் வேகவிட்டு இறக்கவும். இன்னொரு அடி கனமான பானில் வேகவைத்த சாதம், வான்கோழி க்ரேவி, பொடியாக அரிந்த கொத்துமல்லி, சிறிது நெய், முந்திரி, கிஸ்மிஸ் என அடுத்தடுத்து லேயராக அடுக்கி 10 நிமிடம் தம்மில் வைக்கவும். ஆறியதும் திறந்து எலுமிச்சைசாற்றைக் கலந்து வெஜிடபிள் சாலட், பனீர் குருமாவுடன் பரிமாறவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...