எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

15.இறால் பிரியாணி

15.இறால் பிரியாணி


தேவையானவை :-  பாசுமதி அரிசி அரை கிலோஇறால் கால் கிலோபெரிய வெங்காயம் - 3, தக்காளி - 3, இஞ்சி 2 இஞ்ச் துண்டுபூண்டு - 10 பல்பச்சை மிளகாய் - 3, கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்புதினா -  2 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்தயிர் 2 டேபிள் ஸ்பூன்பட்டைகிராம்புஏலக்காய்பிரிஞ்சி இலை - தலா - 2.

 

செய்முறை :- அரிசியைக் களைந்து ஊறவைக்கவும்இஞ்சிபூண்டுபச்சை மிளகாய்கொத்துமல்லியை அரைக்கவும்இறாலில் மஞ்சள்தூள்மிளகாய்த்தூள்மல்லித்தூள் சேர்த்து தயிரும் போட்டு நன்கு கலந்து ஊறவைக்கவும்ப்ரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தைச் சேர்க்கவும்வெங்காயம் தண்ணீர் போல வதங்கியதும் இஞ்சி பூண்டு கொத்துமல்லி விழுதைச் சேர்க்கவும்எண்ணெய் பிரிந்ததும் தக்காளியைப் போடவும்தக்காளி குழைந்ததும் ஊறவைத்த இறாலை மசாலோடு சேர்த்து நன்கு கிளறி கால் கப் தண்ணீர் சேர்த்து மூடியைத் திருப்பி மூடி வேகவிடவும்பத்து நிமிடம் வெந்ததும் ஐந்து கப் நீரூற்றி அரிசியை சேர்க்கவும்உப்புபுதினா சேர்த்து நன்கு கிளறவும்குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்தக்காளித் தொக்குமிண்ட் சட்னியுடன் பரிமாறவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...