எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

23.மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ் பிரியாணி

23.மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ் பிரியாணி


தேவையானவை:- மீல்மேக்கர் – 30, உப்பு சேர்த்து வேகவைத்த கொண்டைக்கடலை – அரை கப், பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், அரைக்க :- பச்சை மிளகாய் – 6, சோம்பு – 1 டீஸ்பூன், தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, கசகசா – அரை டீஸ்பூன், கொத்துமல்லி புதினா தழை – 1 கைப்பிடி. எண்ணெய் + வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – ஒரு டீஸ்பூன்.செய்முறை:- மீல்மேக்கர்/ சோயா சங்கஸை வெந்நீரில் போட்டு மூடி 3 நிமிடம் கழித்து வடிகட்டி அலசிப் பிழிந்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். தேங்காய், பச்சைமிளகாய்,சோம்பு, கசகசா, முந்திரியை அரைக்கவும். ப்ரஷர் குக்கரில் எண்ணெய் + வெண்ணெய் போட்டு பட்டை கிராம்பு ஏலக்காயைத் தாளிக்கவும். வெங்காயத்தை மென்மையாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அது சிவந்ததும் மீல்மேக்கரையும் தக்காளியையும் சேர்த்து அரைத்த மசாலாவையும் சேர்க்கவும். நன்கு திறக்கி விட்டு அரிசியைப் போட்டுக் கலக்கவும். இத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலையையும் கலக்கவும். நான்கு கப் நீரூற்றி உப்பு சேர்த்து மேலாக கொத்துமல்லி புதினாவைத் தூவி ஒரு விசில் வைத்து இறக்கவும். இத்துடன் ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், மீன் வறுவல் சேர்த்துப் பரிமாறவும்.

 

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...