29.பைனாப்பிள் பேரீச்சை ப்ரெட் பிரியாணி
தேவையானவை :- பாசுமதி அரிசி 1 கப், பைனாப்பிள் - கால் பாகம், பேரீச்சை -6, ப்ரெட் - 2 ஸ்லைஸ். பெரிய வெங்காயம் - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தயிர் - 2 டேபிள் ஸ்பூன், பால் - 2 கப், உப்பு - 1 டீஸ்பூன், சீனி - அரை ஸ்பூன், நெய் - 3 டேபிள் ஸ்பூன், ஊறவைத்துத் தோலுரித்த பாதாம் - 8, முந்திரி -8, யெல்லோ ஃபுட்கலர் - 1 சிட்டிகை, புதினா கொத்துமல்லி - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1, பைனாப்பிள் எசன்ஸ் - சிலதுளிகள், குங்குமப்பூ - 1 சிட்டிகை.
செய்முறை:- பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவிடவும். பைனாப்பிள், பிரட்டை ஒரு இஞ்ச் துண்டுகள் செய்யவும். பேரீச்சையை நான்காகத் துண்டு செய்யவும். 2 டேபிள் ஸ்பூன் நெய்யைக் காயவைத்து முந்திரி பாதாமை வறுத்தெடுக்கவும். அதிலேயே ப்ரெட் பைனாப்பிள், பேரீச்சையைப் புரட்டி எடுக்கவும். மிச்ச நெய்யை ஊற்றிப் பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை தாளித்துப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும்வரை வதக்கவும். இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்துப் பச்சை வாடை போனதும் அரிசியைச் சேர்த்து நன்கு வறுக்கவும். பச்சைமிளகாயையும் உப்பையும், சீனியையும், தயிரையும் சேர்த்து நன்கு கிளறி 2 கப் பால் ஊற்றி சிம்மில் வைத்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் வறுத்த பேரீச்சை, பைனாப்பிளை சேர்த்து குங்குமப்பூவையும் யெல்லோ ஃபுட்கலரையும் 1 டேபிள் ஸ்பூன் வெந்நீரில் கரைத்து ஊற்றவும். ஐந்து நிமிடம் தம்மில் வைத்து இறக்கி பைனாப்பிள் எசன்ஸை தெளித்து ப்ரெட் , முந்திரி, பாதாமால் அலங்கரித்து மயோனிஸ், மிண்ட் சட்னி, தக்காளி ஸ்வீட் பச்சடியுடன் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!