எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

புதினா மிளகு பக்கோடா

புதினா மிளகு பக்கோடா:-


தேவையானவை :- கடலை மாவு – 1 கப் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், புதினா – ½ கப், சோம்பு – ¼ டீஸ்பூன், உப்பு – ¼ டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ¼ டீஸ்பூன்,மிளகு - 20, வெண்ணெய் – 1 டீஸ்பூன் எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:- புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு அரிசி மாவு உப்பு சோம்பு மிளகாய்த் தூளை நன்கு கலந்து வெண்ணெயும் புதினாவும், ஒன்றிரண்டாக உடைத்த மிளகும் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து பிரட்டினாற்போலப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக வேக வைக்கவும். மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...