நேந்திரம் பழப் பிரதமன்
தேவையானவை:- நேந்திரம் பழம் – 1, தேங்காய் முற்றியது – 1, வெல்லம் – 4 அச்சு, ஏலக்காய் – 2, நெய் – 2 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 15.
செய்முறை:- நேந்திரம்பழத்தைத் தோலுரித்து வேகவைத்து மசிக்கவும். தேங்காயைத் திருகி கெட்டிப்பால் அரை கப்பும் தண்ணிப்பால் 1 ½ கப்பும் எடுக்கவும். வெல்லத்தைப் பொடித்துப் பாகு காய்ச்சி பழக்கூழையும் சேர்த்துக் காய்ச்சவும். நன்கு கிளறி இரண்டாம் பாலை ஊற்றி இறக்கி வைத்து முதல் பாலையும் சேர்க்கவும். நெய்யில் முந்திரியைப் பொறித்துப் போடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக