எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முளைக்கீரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முளைக்கீரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 செப்டம்பர், 2023

அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை ) :-

அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை ) :-



 

தேவையானவை :- அகத்திக்கீரை – 1 கட்டு (மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை இதில் எது வேண்டுமானாலும் உபயோகப்படுத்திச் செய்யலாம்.), அரிசி களைந்த தண்ணீர் – 2 கப் திக்காகதேங்காய்ப் பால் – 1 கப்சின்ன வெங்காயம் – 10உளுந்து – அரை டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு – கால் டீஸ்பூன்

 

செய்முறை :- அகத்திக்கீரையை ( மேற்கூறியுள்ள கீரைகளில் ஒன்றை ) ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம் தாளித்து பொரிந்ததும் வரமிளகாய் சேர்க்கவும். அதன் பின் வெங்காயத்தை வதக்கி கீரையையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும். கொதிவந்ததும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பும் தேங்காய்ப் பாலும் சேர்த்து இறக்கவும்.

தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்க விட வேண்டாம் திரைந்து போய்விடும். இதை அப்படியே சூப் போலவும் அருந்தலாம் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். வயிற்றுப் புண், அல்சர் தீர கீரை மண்டியை அடிக்கடி செய்து அருந்தலாம். 


 

செவ்வாய், 26 அக்டோபர், 2010

AMARANTH FRY.. முளைக்கீரை பொரியல்...

AMARANTH FRY:-
NEEDED:-
AMARANTH - 1 BUNCH (WASHED ., CLEANED ., CHOPPED)
BIG ONION - 1 NO ( FINELY CHOPPED)
RED CHILLY - 1 NO
MUSTARD - 1 TSP
URAD DAHAL - 1 TSP
SALT - 1/4 TSP
OIL - 1 TSP.
DESICATED COCONUT ( OPTIONAL) - 2 TSP

METHOD:-
HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD HALVED RED CHILLY AND ONIONS. SAUTE FOR ONE MINUTE AND ADD AMARANTHS. SAUTE FOR 3 MINUTES IN A SLOW FLAME.. ADD SALT AND FURTHER COOK FOR 5 MINUTES. IF DESIRES ADD COCONUT AND REMOVE FROM FIRE AND SERVE IT WITH SAMBAR RICE OR VATHAKKUZAMBU RICE.

முளைக்கீரை பொரியல்:-
தேவையானவை:-
முளைக்கீரை - 1 கட்டு ( கழுவி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
வரமிளகாய் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன் ( விரும்பினால்)

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்து போடவும். அது சிவந்தவுடன் ரெண்டாகக் கிள்ளிய மிளகாய்., வெங்காயம் போடவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும். 3 நிமிடங்கள் கீரையை வதக்கியபின் உப்பு சேர்க்கவும். மெல்லியதீயில் இன்னும் 5 நிமிடங்கள் வேகவைத்து விரும்பினால் தேங்காய் சேர்த்து சாம்பார் சாதம் அல்லது வத்தக்குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...