எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 நவம்பர், 2010

PEA NUT CARROT CHAT.. கடலை காரட் சாட்..

PEA NUT CARROT CHAT :-
FRIED CLEANED PEANUTS - 1 HANDFUL
CARROT FRY - 1 TBL SPN
CORRIANDER CHUTNEY - 2 TSP
CHAT MASALA - 1 PINCH ( OPTIONAL)

MIX THE THREE IN A BOWL AND SPRINKLE CHAT MASALA POWDER.
HAVE IT AS A HEALTHY EVENING SNACKS.

கடலை காரட் சாட்:-
வறுத்து சுத்தம் செய்த வேர்க்கடலை - 1 கைப்பிடி.
காரட் பொரியல் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்து மல்லித் துவையல் - 2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 சிட்டிகை

ஒரு பவுலில் இது மூன்றையும் கலந்து சாட் மசாலாவை தூவி சாப்பிடவும். நல்ல ஹெல்தியான மாலை நேர சிற்றுண்டி இது ..

வெள்ளி, 29 அக்டோபர், 2010

PUDINA PULAV.. .. புதினா புலவ்...

PUDINA PULAV:-
NEEDED :-
BASMATHY RICE - 1 CUP
BIG ONION - 1 ( CHOPPED)
TOMATO - 1 ( CHOPPED )

TO GRIND :-
PUDINA (PEPPERMINT) LEAVES - 1 BUNCH
CORRIANDER LEAVES - 1 HAND FUL
GREEN CHILLY - 1 0R 2 NO.
COCONUT - 3 INCH SQUARE.
GINGER - 1 INCH PIECE
GARLIC - 4 PODS
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
BLACK PEPPER - 10 NOS.

TO FRY :-
OIL - 1 TBLSN
CINNAMON - 1 INCH PIECE
CARDAMOM - 1
CLOVE - 2
BAY LEAVES - 1 INCH PIECE
ANNASI PUU - 1

METHOD :-
WASH AND CLEAN THE CORRIANDER AND PUDINA LEAVES .. ADD ALL THE OTHER INGREDIENTS AND GRIND THEM WELL. ADD 2 TUMBLERS OF WATER AND FILTER IT . AND TAKE THE WATER FOR MAKING THE RICE.
WASH THE RICE. HEAT OIL IN A PAN ADD CINNAMON., CARDAMOM., BAY LEAVES ., CLOVES AND ANNASIP PUU. ADD THE ONION AND TOMATO SAUTE FOR 2 MINUTES AND ADD RICE . ADD SALT AND THE FILTERED WATER. STIRR WELL AND KEEP THE COOKER FOR ONE OR TWO WHISTLE . REMOVE FROM FIRE ANDAFTER 10 MINUTES SERVE HOT WITH CUCUMBER CARROT SALAD ., AND PINEAPPLE RAITHA., AND BOILED EGGS AND POTATO CHIPS.

புதினா புலவ்:-
தேவையானவை :-
பாசுமதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
தக்காளி - 1 பொடியாக அரிந்தது

அரைக்க:-
புதினா - 1 கட்டு
கொத்துமல்லி - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தேங்காய் - 3 இன்ச் துண்டு
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10

தாளிக்க :-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
இலை - 1 இன்ச் துண்டு
அன்னாசிப் பூ - 1

செய்முறை :-
புதினா., கொத்துமல்லியை கழுவி ., சுத்தம் செய்து மற்ற பொருட்களுடன் போட்டு நன்கு அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்கு களையவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை ., கிராம்பு., ஏலக்காய்., இலை., அன்னாசிப்பூ எல்லாம் தாளிக்கவும். அதில் வெங்காயம்., தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து அரைத்த தண்ணீரை சேர்க்கவும். நன்கு கிளறி ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சூடாக புதினா புலவை வெள்ளரி காரட் சாலட்., பைன் ஆப்பிள் ரெய்த்தா., அவித்த முட்டை., உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்..

செவ்வாய், 26 அக்டோபர், 2010

AMARANTH FRY.. முளைக்கீரை பொரியல்...

AMARANTH FRY:-
NEEDED:-
AMARANTH - 1 BUNCH (WASHED ., CLEANED ., CHOPPED)
BIG ONION - 1 NO ( FINELY CHOPPED)
RED CHILLY - 1 NO
MUSTARD - 1 TSP
URAD DAHAL - 1 TSP
SALT - 1/4 TSP
OIL - 1 TSP.
DESICATED COCONUT ( OPTIONAL) - 2 TSP

METHOD:-
HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD HALVED RED CHILLY AND ONIONS. SAUTE FOR ONE MINUTE AND ADD AMARANTHS. SAUTE FOR 3 MINUTES IN A SLOW FLAME.. ADD SALT AND FURTHER COOK FOR 5 MINUTES. IF DESIRES ADD COCONUT AND REMOVE FROM FIRE AND SERVE IT WITH SAMBAR RICE OR VATHAKKUZAMBU RICE.

முளைக்கீரை பொரியல்:-
தேவையானவை:-
முளைக்கீரை - 1 கட்டு ( கழுவி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
வரமிளகாய் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன் ( விரும்பினால்)

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்து போடவும். அது சிவந்தவுடன் ரெண்டாகக் கிள்ளிய மிளகாய்., வெங்காயம் போடவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும். 3 நிமிடங்கள் கீரையை வதக்கியபின் உப்பு சேர்க்கவும். மெல்லியதீயில் இன்னும் 5 நிமிடங்கள் வேகவைத்து விரும்பினால் தேங்காய் சேர்த்து சாம்பார் சாதம் அல்லது வத்தக்குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

BREAD TOAST WITH VEG KURMA.. ப்ரெட் டோஸ்ட் .,வெஜ் குருமா..

BREAD TOAST WITH VEG KURMA:-
NEEDED FOR BREAD TOAST :-
BREAD SLICES - 4
AMUL BUTTER - 1 TSP
METHOD :-
SPREAD BUTTER IN THE SIDES OF BREAD AND TOAST WELL IN A TAWA OR TOASTER.

NEEDED FOR KURMA:-
CARROT (DICED) - 2 NOS.
BEANS (CUT INTO ONE INCH PIECES) - 100GMS
POTATO ( DICED) - 1 NO
BIG ONION CHOPPED - 1 NO
TOMATO CHOPPED - 1 NO

FOR GRINDING :-
LONG GREEN CHILLY - 1
COCONUT - 4 INCH SQUARE
FRIED CHANNA DHAL - 1/2 TBLSPN
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
PEPPER - 5 NOS
GINGER - 1 INCH PIECE
GARLIC - 2 PODS
SMALL ONION - 2 NOS
CLOVE - 1 NO
CARDAMOM - 1 NO
CINNAMON - 1 PINCH
SALT - 1/2 TSP

FOR FRYING:-
OIL - 2 TSP
BAY LEAF - 1 INCH PIECE
CARDAMOM - 1NO
CLOVE - 1 NO
CINNAMON - 1 PINCH

METHOD :-
GRIND ALL THE INGREDIENTS. HEAT OIL IN A PAN ADD CLOVES., CINNAMON., BAY LEAF., CARDAMOM. ADD ONION AND TOMATO . SAUTE WELL. THEN ADD THE VEGETABLES ., SAUTE FOR 2 MINUTES AND ADD THE GROUND MASALA. ADD SOME WATER AND COOK WELL FOR 5 MINUTES AND SERVE HOT WITH TOASTED BREAD OR CHAPPATHIS.

ப்ரெட் டோஸ்ட் ., வெஜ் குருமா..:-
ப்ரெட் டோஸ்ட் செய்யத் தேவையானவை :-
ப்ரெட் ஸ்லைசஸ் - 4
அமுல் பட்டர் - 1 டீஸ்பூன்
செய்முறை :-
அமுல் பட்டரை ப்ரெட்டின் இரு புறங்களிலும் தடவி தோசைக்கல் அல்லது டோஸ்டரில் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ளவும்.

வெஜ் குருமா செய்ய தேவையானவை :-
காரட் ( சதுரமாக வெட்டியது) - 2
பீன்ஸ்( ஒரு இன்ச் துண்டாக வெட்டியது) - 100 கிராம்
உருளைக் கிழங்கு(சதுரமாக வெட்டியது) - 1
பெரிய வெங்காயம்(பொடியாக அரிந்தது) - 1
தக்காளி( பொடியாக அரிந்தது) - 1

அரைக்க:-
பெரிய பச்சை மிளகாய் - 1
தேங்காய் - 4 இன்ச் சதுர துண்டு
பொட்டுக்கடலை - 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு- 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 5
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பட்டை - 1 சிட்டிகை
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
உப்பு - /2 டீஸ்பூன்

தாளிக்க :-
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 1
ஏலக்காய் -1
இலை - 1 இன்ச் துண்டு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை., கிராம்பு., ஏலக்காய் ., இலை போட்டு தாளிக்கவும். வெங்காயம் ., தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் காய்களைப் போட்டு 2 நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை ஊற்றவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வெந்தவுடன் ப்ரெட் டோஸ்ட் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

OATS RAVA DOSAI.. ஓட்ஸ் ரவா தோசை..

OATS RAVA DOSA:-
NEEDED:-
DOSA FLOUR OR FRESH CURD - 1 CUP
POWDERED OATS - 1 CUP (SAFFOLA OR QUICKER)
WHITE RAVA - 1 CUP
ATTA - 1/4 CUP
ONION (FINELY CHOPPED) - 1 NO.
GREEN CHILLY ( FINELY CHOPPED ) - 1 NO.
CURRY LEAVES (FINELY CHOPPED - 1 ARK
JERRA - 1/2 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
SALT - 1/2 TSP
OIL - 20 ML.

METHOD :-
SOAK WHITE RAVA IN WATER FOR HALF AN HOUR. MIX ALL THE FLOUR ., SALT., CHILLIES., CURRY LEAVES., ONIONS., ASAFOETIDA.., JEERA..
BLEND WELL AND ADD RAVA ALONG WITH ENOUGH WATER TO MAKE IT IN LIQUID CONSISTENCY.. WITH THIS BATTER PREPARE DOSAS AND SERVE HOT WITH KARUVEEPPILAI KOTHUMALLI CHUTNEY., TOMATO CHUTNEY AND KATHRIKKAY KOSUMALLI..

TO REDUCE WEIGHT U CAN HAVE OATS RAVA DOSAI WITH MINIMUM OIL.

ஓட்ஸ் ரவா தோசை..:-
தேவையானவை:-
தோசை மாவு அல்லது புது தயிர் - 1 கப்
ஓட்ஸ் பொடித்தது - 1 கப்
வெள்ளை ரவை - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
பெரிய வெங்காயம் ( பொடியாக அரிந்தது ) - 1
பச்சை மிளகாய் ( பொடியாக அரிந்தது ) - 1
கருவேப்பிலை ( பொடியாக அரிந்தது ) - 1 இணுக்கு.
ஜீரகம் - 1/ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 20 மிலி

செய்முறை:-
வெள்ளை ரவையை அரைமணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். எல்லா மாவுகளையும் நன்கு கலந்து., உப்பு., ஜீரகம்., கருவேப்பிலை., பெருங்காயத்தூள்., பச்சை மிளகாய், வெங்காயம் ., ரவை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசைகளாக சுட்டு எடுத்து சூடாக., கருவேப்பிலை கொத்துமல்லி துவையல்., தக்காளித்துவையல்., கத்திரிக்காய் கோசமல்லியுடன் பரிமாறவும்.

எடை குறைக்க எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தவும்..
Related Posts Plugin for WordPress, Blogger...