எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 அக்டோபர், 2019

2.சித்திரா பௌர்ணமி – கருப்பட்டிக் கொழுக்கட்டை

2.சித்திரா பௌர்ணமி – கருப்பட்டிக் கொழுக்கட்டை

தேவையானவை :- பச்சரிசி – 2 கப், கருப்பட்டி – 200 கி, தேங்காய்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், எள் – 1 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:- பச்சரிசியைக் கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். கருப்பட்டியைப் பொடியாக்கி அரைகப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி தேங்காய்த்துருவல், எள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். இட்லிப் பாத்திரத்தில் பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைத்து 20 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.
 

வியாழன், 10 அக்டோபர், 2019

1.தமிழ் புதுவருஷம் – பனானா புட்டிங்

1.தமிழ் புதுவருஷம் – பனானா புட்டிங்

தேவையானவை :- செவ்வாழைப்பழம் -1, ரஸ்தாளி – 1, தேன்கதலி/கற்பூரவல்லி – 1, சிறுமலைப்பழம் – 1, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை :- செவ்வாழைப்பழம், ரஸ்தாளி, தேன்கதலி, சிறுமலைப்பழம் ஆகியவற்றின் தோலை உரித்து மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு தட்டில் வாழைப்பழத் துண்டுகளைப் பரப்பி அவற்றின்மேல் தேங்காய்த் துருவலைத் தூவவும். அதன் மேல் தேனை ஊற்றி ஏலப்பொடியைத் தூவி நிவேதிக்கவும்.
  

சனி, 24 ஆகஸ்ட், 2019

30 பண்டிகைகள் 30 வித நிவேதனங்கள்.(30 PRASADHAMS ) குமுதம் பக்தி ஸ்பெஷலில் தனி இணைப்பு.

ஆண்டு முழுவதும் வரும்30 விதமான பண்டிகைகளுக்கு கடவுளுக்கு நிவேதிக்க 30 விதமான நிவேதனங்கள் குறிப்பு குமுதம் பக்தி ஸ்பெஷலில் தனி இணைப்பாக வந்துள்ளது. முன்பே தீபாவளி, மகான்கள், நவராத்திரி ஆகிய இணைப்புப் புத்தகங்கள் வந்துள்ளன. இது நான்காவது புத்தகம்.


வியாழன், 21 மார்ச், 2019

கீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.

1.முருங்கைக்கீரை வாழைப்பூ துவட்டல்
2.முள்ளுமுருங்கை தினை அடை
3.பீட்ரூட் கட்லெட்
4.கருணைக்கிழங்கு கோளா
5.பிரண்டைப் பச்சடி
6.வல்லாரை வத்தக்குழம்பு
7.எள்ளு சம்மந்தி
8.மணத்தக்காளிக்கீரை கழனிச்சாறு.
9.முளைக்கீரை தயிர்க்கூட்டு
10.மேத்தி பரோட்டா ( வெந்தயக்கீரை )
11.முடக்கத்தான் தோசை
12.தூதுவளை ரசம்
13.வேப்பம்பூ வெல்லப் பச்சடி
14.கருவேப்பிலை கொத்துமல்லி புதினா துவையல்
15.வாழைத்தண்டு சாம்பார்
16.பசலைக்கீரை மசியல்
17.வேங்கரிசி மாவு
18.ஆடிக் கூழ்
19.கவுனரிசி ( இனிப்பு )
20.பாகற்காய் பகோடா
21.மாவடு இஞ்சி கொண்டக்கடலை மண்டி
22.சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு தொக்கு
23.கறுப்பு உளுந்து சப்ஜி
24.காரட் சூப்
25.ஆட்டிக்கிண்டும் கொழுக்கட்டை
26.சிவப்பரிசிப் புட்டு
27.கார் அரிசி வெல்லப்புட்டு
28.பப்பாளி பால் கூட்டு
29.மொளகுபொடி சாதம்

30.ஆப்பிள் ரிங் பஜ்ஜி
  

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

கொத்துமல்லி பச்சைமிளகாய் சட்னி.


கொத்துமல்லி பச்சைமிளகாய் சட்னி. :-


தேவையானவை :-

கொத்துமல்லி - 1 கட்டு, பச்சைமிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 6, பூண்டு -1பல். உப்பு - அரை டீஸ்பூன், புளி - ஒரு சுளை., பெருங்காயம் - சிறு துண்டு.  தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை :- கொத்துமல்லியை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கவும். இத்துடன் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு உப்பு புளி பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து உபயோகிக்கவும்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...