எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 ஜனவரி, 2023

வத்தல் வடாம் வகைகள்.

 குமுதம் சிநேகிதியின் குட்டி புக்கில்  வெளியான வத்தல் வடாம் போடுவது பற்றிய குறிப்புகள். 


வத்தல் வடகங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

பாம்பே சட்னி:-

பாம்பே சட்னி:-


தேவையானவை:- கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 2 கப், பெரியவெங்காயம் – பாதி, தக்காளி -1, வரமிளகாய் – 2, பச்சைமிளகாய் -2, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தாளிக்க:- கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிது, எலுமிச்சை சாறு – சில துளிகள்.

செய்முறை:- கடலைமாவை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு, கருவேப்பிலை, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய் தாளித்து நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த கடலை மாவை ஊற்றவும். அது நன்கு கொதித்ததும் கரண்டியால் கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். மல்லித்தழை, எலுமிச்சைச் சாறு கலந்து உபயோகிக்கவும். 

 

வியாழன், 22 டிசம்பர், 2022

சுகியன்:-

சுகியன்:-


தேவையானவை:- இட்லி மாவு ரெண்டு கப், கடலைப்பருப்பு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- கடலைப்பருப்பை வேகவைத்து வெல்லம் தேங்காய் சேர்த்துக் கிளறிப் பூரணம் செய்து முந்திரியை வறுத்துப் போடவும். இந்தப் பூரணத்தை எலுமிச்சை அளவு உருட்டி வைக்கவும். இந்த உருண்டைகளை இட்லிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..

 

புதன், 21 டிசம்பர், 2022

அசோகா :-

அசோகா :-


தேவையானவை :- பாசிப்பருப்பு – 1 கப் , கோதுமை மாவு – 1 கப்,  எண்ணெய் - அரைகப், நெய் – கால் கப், டால்டா - கால் கப், சர்க்கரை – ஒன்றரைகப். முந்திரி பாதாம் கிஸ்மிஸ் – தலா 8, ஏலக்காய் – 2 தோலோடு பொடிக்கவும். ரெட் ஃபுட் கலர் - சிறிது.

செய்முறை :- பாசிப்பருப்பை வேகவிடவும். நன்கு வெந்ததும் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும். கோதுமை மாவை எண்ணெயைக் காயவைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் நீர்க்கக் கரைத்த பாசிப்பருப்பை ஊற்றவும். இரண்டும் சேர்ந்து சுருண்டு வரும்போது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கலர்ப்பொடி சேர்க்கவும், நெய்யை உருக்கி அதில் முந்திரி பாதாம் கிஸ்மிஸை வறுக்கவும். உருக்கிய மிச்ச நெய்யையும் டால்டாவையும்  அல்வாவில் அவ்வப்போது ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வந்ததும் இறக்கி முந்திரி பாதம் கிஸ்மிஸை சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

 

 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

இருபருப்பு வடை.

இருபருப்பு வடை.


தேவையானவை:- கடலைப்பருப்பு – 1 கப், வெள்ளை உருண்டை உளுந்தம் பருப்பு -1 கப், பச்சைமிளகாய் – 2, வரமிளகாய்- 2, கருவேப்பிலை, கொத்துமல்லி – தலா ஒரு கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கடலைப்பருப்பையும் உளுந்தம் பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் பச்சைமிளகாய், வரமிளகாயை உப்பு சேர்த்து அரைத்து உளுந்தையும் கடலைப்பருப்பையும் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அதில் கருவேப்பிலை கொத்துமல்லியைப் பொடியாக அரிந்து போட்டு இளக்கமாகத் தட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...