எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 செப்டம்பர், 2023

சாஃப்ரான் செமோலினா

சாஃப்ரான் செமோலினா


தேவையானவை:- சேமியா -1 கப், பால்- 2 கப், கல்கண்டு பொடித்தது – 2 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ -1 சிட்டிகை, முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் – தலா பத்து. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பாலைக் காய்ச்சி சிறிதளவு பாலில் குங்குமப்பூவை சூடாக இருக்கும்போதே போட்டுக்கரைத்து வைக்கவும். மிச்சப் பாலில் சேமியாவை வேகவிடவும். நன்கு வெந்ததும் பொடித்த கல்கண்டு சேர்த்து பாலில் ஊறிய குங்குமப்பூவைச் சேர்த்து வேகவிடவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை  குச்சியாகச் சீவி கிஸ்மிஸுடன் நெய்யில் பொரித்து சேமியாவின் மேல் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

ஜவ்வரிசி சேமியா ரெஸிப்பீஸ்

ஜவ்வரிசி சேமியா ரெஸிப்பீஸ் 

 


1.ஜவ்வரிசி புரத போகா
2.ஐந்தரிசிப் பணியாரம்
3.பிசினரிசிப் புட்டு இனிப்பு
4.பிசினரிசிப் புட்டு உப்பு
5.ஜவ்வரிசி ஊத்தப்பம்
6.தவலை வடை
7.சாபுதானா கிச்சடி
8.ஜவ்வரிசி பொங்கல்
9.ஜவ்வரிசி சேமியா பால் ஐஸ்
10.ஜவ்வரிசி ஃப்ரூட் கேக்

 


1.சாஃப்ரான் செமோலினா
2.வெஜ் சேமியா சூப்
3.ராகி இனிப்பு சேமியா
4.தஹி சேமியா
5.லெமன் சேமியா
6.ஃப்ரூட் ஃபலூடா
7.சேமியா இட்லி
8.சேமியா நெஸ்ட் கட்லெட்

இந்த ரெசிப்பீஸ் 9.2.2023 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

 

வியாழன், 7 செப்டம்பர், 2023

அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை ) :-

அகத்திக்கீரை மண்டி (மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முளைக்கீரை ) :-



 

தேவையானவை :- அகத்திக்கீரை – 1 கட்டு (மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை இதில் எது வேண்டுமானாலும் உபயோகப்படுத்திச் செய்யலாம்.), அரிசி களைந்த தண்ணீர் – 2 கப் திக்காகதேங்காய்ப் பால் – 1 கப்சின்ன வெங்காயம் – 10உளுந்து – அரை டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு – கால் டீஸ்பூன்

 

செய்முறை :- அகத்திக்கீரையை ( மேற்கூறியுள்ள கீரைகளில் ஒன்றை ) ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம் தாளித்து பொரிந்ததும் வரமிளகாய் சேர்க்கவும். அதன் பின் வெங்காயத்தை வதக்கி கீரையையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும். கொதிவந்ததும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பும் தேங்காய்ப் பாலும் சேர்த்து இறக்கவும்.

தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்க விட வேண்டாம் திரைந்து போய்விடும். இதை அப்படியே சூப் போலவும் அருந்தலாம் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். வயிற்றுப் புண், அல்சர் தீர கீரை மண்டியை அடிக்கடி செய்து அருந்தலாம். 


 

திங்கள், 4 செப்டம்பர், 2023

பைனாப்பிள் ரசம்

பைனாப்பிள் ரசம்


 

தேவையானவை:- பைனாப்பிள் – 3 ஸ்லைஸ், துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், புளி – 2 சுளை, உப்பு – ½ டீஸ்பூன், வரமிளகாய் – 2, மிளகு – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், பூண்டுப்பல் – 2, கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்

 

செய்முறை:- பைனாப்பிளையும் பருப்பையும் குக்கரில் தனித்தனியாக வேகவைக்கவும். பருப்பை நன்கு மசித்து பைனாப்பிளை துண்டாக மசித்து சேர்க்கவும். அதில் புளியையும் உப்பையும் இரண்டு கப் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். ( பைனாப்பிள் புளிப்பாக இருந்தால் புளி வேண்டாம் ). எண்ணெயைக் காயவைத்துக் கடுகு சீரகம் வெந்தயம் பெருங்காயத்தூள் தாளித்து மிளகாயை துண்டாக உடைத்துப் போடவும் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு பூண்டையும் தட்டிப் போடவும். மஞ்சள் தூள் போட்டு கரைத்த பைனாப்பிள் பருப்புக் கலவையை ஊற்றவும். நுரைத்து வரும்போது இறக்கவும். இது நாவறட்சியைப் போக்கும்.

 

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

ரோஜாப்பூ பன்னீர் ரசம்

ரோஜாப்பூ பன்னீர் ரசம்


 

தேவையானவை:- ரோஜாப்பூ – 2, பன்னீர் –  1 டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டீஸ்பூன், மிளகாய் – 1, தனியா – ½ டீஸ்பூன், மிளகு  - 10 , சீரகம் – அரை டீஸ்பூன், புளி – 1 நெல்லி அளவு, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,எண்ணெய்/நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்

 

செய்முறை:- ரோஜா இதழ்களை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பு மிளகாய், தனியா மிளகு சீரகத்தை லேசாக வெதுப்பி பொடித்து வைக்கவும். உப்புப் புளியைக் கரைத்து 2 கப் தண்ணீர் எடுக்கவும். இதில் மஞ்சள் தூள், பொடித்த ரசப் பொடியைப் போட்டுக் கொதிக்க விடவும். நுரைத்து வரும்போது நெய் அல்லது எண்ணெயில் கடுகு சீரகம் தாளித்து இறக்கவும். சிறிது சூடு அடங்கியதும் ரோஜாப்பூவிதழ்களைப் போட்டு பன்னீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்துப் பின் உபயோகிக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...