எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

7.தக்காளி ஜாம்

7.தக்காளி ஜாம்



 

தேவையானவை:- தக்காளி – அரை கிலோ, ஜீனி – 35 கி, எலுமிச்சை சாறு – அரை டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு – தலா மூன்று.

 

செய்முறை:- தக்காளிகளைக் கீறிக் கொதிக்கும் வெந்நீரில் போட்டுப் பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறியதும் தோலை உரித்து விதை இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் எடுத்து அரைத்து வைக்கவும். ஒரு பானில் இதைப் போட்டு நீர் சுண்டும்வரை கிளறவும். இதில் ஜீனி சேர்த்து மேலும் கிளறவும். ஓரளவு தளதளவெனக் கொதித்துக் கெட்டிப் பாகு ஆகும்போது எலுமிச்சைச் சாறைச் சேர்த்துப் பட்டை கிராம்பைப் பொடித்துப் போட்டு நன்கு கிளறி இறக்கவும். வெதுவெதுப்பாக இருக்கும்போதே கண்ணாடி பாட்டில்களில் மாற்றவும். இந்த ஜாம் ப்ரெட், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

6.இஞ்சி முரப்பா

6.இஞ்சி முரப்பா


 

தேவையானவை:- இஞ்சி தோல் நீக்கித் துருவியது – 1 கப், பால் – 1 கப், ஜீனி – 1 கப்

 

செய்முறை:- இஞ்சியுடன் பால் சேர்த்து மைய அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறி நெய் தடவிய ட்ரேயில் கொட்டித் துண்டுகள் போடவும்.

வியாழன், 8 பிப்ரவரி, 2024

5.மரவள்ளிக்கிழங்கு போளி

5.மரவள்ளிக்கிழங்கு போளி



 

தேவையானவை:- மரவள்ளிக்கிழங்கு – 250 கிராம், மைதா – 2 கப், வெல்லம் – ஒன்றரை கப், தேங்காய்த்துருவல் – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 200 கி, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை.

 

செய்முறை:- மரவள்ளிக்கிழங்கை அவித்து உதிர்த்து வைக்கவும். வெல்லம், தேங்காய்த்துருவல், மரவள்ளிக்கிழங்கை ஒரு பானில் போட்டுக் கெட்டியாகும் வரை கிளறி சிறிது நெய் சேர்த்து இறக்கிவைக்கவும். மைதாவில் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை ஜீனி சேர்த்து நீர் தெளித்துப் பிசைந்து எண்ணெய் ஊற்றி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து மைதாவில் உருண்டைகள் செய்து அதன் நடுவில் மரவள்ளிக்கிழங்கு பூரணத்தை வைத்துக் கனமான சப்பாத்திகள் போலத் தட்டி நெய் விட்டுச் சுட்டு எடுக்கவும்.

திங்கள், 5 பிப்ரவரி, 2024

4.உருளை பான்கேக்

4.உருளை பான்கேக்


 

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா – 1 கப், பால் -1 கப், சீனி - கால் கப், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை, ஆலிவ் ஆயில் – சிறிது.

 

செய்முறை:- உருளைக்கிழங்கைத் தோல்சீவி நைஸாகத் துருவவும். வெண்ணெய், பேக்கிங் பவுடர், ஜீனியைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். இதில் துருவிய உருளை, மைதா, பாலை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். அதிகம் அடிக்க வேண்டாம். ஒரு நான்ஸ்டிக் தவாவில் ஆலிவ் ஆயிலை ஸ்ப்ரே செய்து ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி லேசாக ஊத்தப்பம்போல் தடவவும்.இருநிமிடங்கள் கழித்து திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்துத் தேன், ஜாம், வெண்ணையுடன் பரிமாறவும். 

சனி, 3 பிப்ரவரி, 2024

13. ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

13. ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

தேவையானவை:-மைதா – 1 கப் + 1 டேபிள் ஸ்பூன், கோகோ பவுடர் – அரைகப், பேகிங் பவுடர் – 2 டீஸ்பூன், முட்டை – 6 , சீனி – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன், வனிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன், சிரப் செய்ய :- சீனி – அரை கப், தண்ணீர் – அரை கப், செர்ரிப் பழங்கள் – 1 டப்பா, சீனி – கால் கப், கார்ன் ஸ்டார்ச் – 1/3 கப், ஹெவி க்ரீம் – 2 1/2 கப், பொடித்த சீனி – அரை கப்,

செய்முறை:- ஒரு பௌலில் மைதா ஒரு கப், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் போட்டு நன்கு கலக்கவும். இன்னொரு பௌலில் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றிச் சீனியையும் உப்பையும் சேர்த்து பீட்டரால் இருமடங்காகும் வரை நன்கு அடிக்கவும். இதில் கோகோ மைதா மிக்ஸர், வனிலா எசன்ஸ், கால் கப் வெண்ணெயை உருகவைத்து ஊற்றி நன்கு கலக்கவும். ஒரு 9 இஞ்ச் கேக் ட்ரேயில் கோகோ பவுடரைத் தூவி டஸ்ட் செய்யவும். அதில் கேக் கலவையை ஊற்றவும். 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் 180 டிகிரி செண்டிகிரேடில் 30 – 35 நிமிடம் பேக் செய்யவும். வெளியே எடுத்துக் குளிர விடவும். அரைக் கப் தண்ணீர், சீனி சேர்த்து சிரப் செய்யவும். செர்ரிப் பழங்களை வடிகட்டி அந்த ஜூஸை சாஸ்பேனில் ஊற்றி கால் கப் சீனி, கார்ன் ஸ்டார்ச் சேர்த்துக் கெட்டியாகும் வரை காய்ச்சி செர்ரிப் பழங்களை சேர்க்கவும். ஹெவி க்ரீமில் பொடித்த சீனி சேர்த்துக் கூம்பாக எழும்பும்வரை அடித்து பைபிங் பேக்கில் போடவும். கேக் கட்டரால் நான்கு சம துண்டுகளாக படுக்கை வசத்தில் வெட்டவும். இதில் ஒவ்வொரு லேயரிலும் சிரப் தடவி நடுவில் செர்ரி கலவை வைத்துச் சுற்றிலும் க்ரீம் கலவையை பைபிங் செய்யவும். இதேபோல் நான்கு லேயர்களையும் அடுக்கி மேலே ஹெவி க்ரீம் தடவி, டார்க் சாக்லேட்டைச் சீய்த்துத் தூவி க்ரீம் பூக்கள் பைபிங் செய்து செர்ரியால் அலங்கரிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...