எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 அக்டோபர், 2025

க்ரேவி & சப்ஜி ரெஸிப்பீஸ்

க்ரேவி சப்ஜி ரெஸிப்பீஸ்





1.மஷ்ரூம் க்ரேவி

2.தக்காளி க்ரேவி

3.மட்டர் பனீர் க்ரேவி

4.ஹரி சன்னா க்ரேவி

5.ஆலுகோபி சுக்கா சப்ஜி

6.மூங்க்தால் சப்ஜி

7.அம்ருத் சப்ஜி

8.கருப்பு உளுந்து சப்ஜி

9.கடுகுக் கீரை சப்ஜி

10.உருளை எலுமிச்சை சப்ஜி சுக்கா

11.ஷாஹி பனீர்

12.பனீர் கேப்ஸிகம் சப்ஜி சுக்கா

13.லோபியா க்ரேவி

14.கருப்புக் கொண்டைக்கடலை மசாலா

15.ஆலு டமாட்டர்

16.ஆலு மேத்தி

17.குல்தி கி டால்

18.தால் ஃப்ரை

19.பாலக் பனீர்

20.மொச்சை சப்ஜி

21.ராஜ்மா

22.பஞ்சாபி பனீர் பட்டர் மசாலா

23.சுக்கா பிண்டி சப்ஜி

24.கரேலா சப்ஜி

25.பைங்கன் பர்த்தா

வியாழன், 2 அக்டோபர், 2025

வெஜ் பேணி

வெஜ் பேணி



தேவையானவை:- பச்சரிசி – 2 கப், ஃபில்லிங்க் செய்ய:- அவித்த உருளைக்கிழங்கு – 1 ( பெரியது), பீட்ரூட் சின்னம் – 1 துருவவும், காரட் – 1 துருவவும்., பச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கவும்., இஞ்சி – 1 இன்ச் – பொடியாக நறுக்கவும்., மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – 1/3 டீஸ்பூன்., வெண்ணெய் – 1 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன்

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டு மாவைத் தூவிப் பிசையவும்.. பந்துபோல உருண்டுவந்ததும் இறக்கி ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்துப்  பச்சைமிளகாய், இஞ்சி, காரட், பீட்ரூட் துருவலை வதக்கி இறக்கி வைத்து அதில் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக அரிந்த  கொத்துமல்லித் தழை, மிளகு ஜீரகத்தூள், வெண்ணெய் போட்டு நன்கு பிசைந்து பதினாறு உருண்டைகளாக உருட்டவும். மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால்  கிண்ணங்களாகத் தட்டி உள்ளே ஃபில்லிங்கை வைத்து  எருக்கலங்கொழுக்கட்டை மாதிரியோ அல்லது சோமாசி மாதிரியோ மடித்து ஓரங்களை நன்கு ஒட்டி ஆவியில் 10 – 15  நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

 

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை

எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை



தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப், உப்பு – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன். பூரணம் செய்ய – வறுத்த வெள்ளை எள் – 1 கப், வறுத்த வேர்க்கடலை – கால் கப், வெல்லம் முக்கால் கப், ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து உப்பும் நல்லெண்ணையும் சேர்த்துப் பச்சரிசி மாவைக் கொட்டிக் கரண்டிக் காம்பால் கிளறி மூடி வைக்கவும். ஆறியதும் நன்கு மிருதுவாகப் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும். வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, பொடித்த வெல்லம் ஏலப்பொடி சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். நன்கு பொடிந்தவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். மேல்மாவை எடுத்து வட்டமாகக் கிண்ணம்போல் தட்டி எள்ளுப் பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும்.

வியாழன், 25 செப்டம்பர், 2025

ஓட்ஸ் வெஜ் கொழுக்கட்டை

ஓட்ஸ் வெஜ் கொழுக்கட்டை



தேவையானவை :- அரிசி – 2 கப், ஓட்ஸ் – 1 கப், பொடியாக அரிந்த காரட் பீன்ஸ், பட்டாணி,குடைமிளகாய் – அரை கப், தேங்காய் துருவல் – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன், பொடியாக அரிந்த வெங்காயம் – 1. தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வரமிளகாய் – 2  விதையை உதிர்த்துவிட்டு துண்டு துண்டாக ஒடித்து வைக்கவும். கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- அரிசியை ஊறவைக்கவும். ஓட்ஸைப் பொடித்து வைக்கவும். அரிசி இரண்டு மணி நேரம் ஊறியதும் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பொடித்த ஓட்ஸை இதில் போட்டுக் கலந்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வரமிளகாய், உளுந்து, சீரகம், கருவேப்பிலை, தாளிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயம் , காய்கறிக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். தளரக் கரைத்த அரிசி ஓட்ஸ் கலவையை ஊற்றி நன்கு கிளறவும். பானில் ஒட்டாத பதம் வரும்போது தேங்காய்த் துருவலைப் போட்டு இறக்கவும். லேசாக ஆறியதும் நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைக்கவும்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

ஸ்டஃப்டு சோளக் கொழுக்கட்டை ( டாமலீஸ் )

ஸ்டஃப்டு சோளக் கொழுக்கட்டை ( டாமலீஸ் )



தேவையானவை :- சோளக்கருது மடலுடன் – 2, பச்சரிசி மாவு – அரை கப், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சீஸ் – 1 டேபிள் ஸ்பூன், பால் – அரை கப், கொத்துமல்லித்தழை –  2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது, குக்னி – 1 ( வெள்ளரிக்காயில் ஒரு வகை), குட்டி தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- சோளக்கருதை மடல் உரித்து அந்த மடல்களை கொதிக்கும் வெந்நீரில் ஒரு நிமிடம் மூழ்க வைத்துச் சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்ளவும். சோளமுத்துகளை உதிர்த்துப் பால் சேர்த்து மையாக அரைக்கவும். வெறும் கடாயை அடுப்பில் வைத்து அரைத்த சோளத்தை ஊற்றிக் கிளறவும். இறுகிவரும்போது சோளமாவும் அரிசி மாவும் சேர்த்து உப்பு கொத்துமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும். இன்னொரு பானில் பாதி வெண்ணெயை உருகவைத்து வெங்காயத்தை மென்மையாக வதக்கவும். இதில் துருவிய சீஸை சேர்த்து கிளறி இறக்கி மாவில் போட்டு நன்கு பிசையவும். மிச்ச அரைடீஸ்பூன் வெண்ணெயை உருகவைத்து அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கட்டமாக நறுக்கிய தக்காளி, குக்னி போட்டு வதக்கி இறக்கவும். சோளமடல்களைத் துடைத்து மாவுக் கலவையை ஒரு ஸ்பூன் வைத்து அதன் நடுவில் குக்னி தக்காளி பச்சைமிளகாய் ஸ்டஃபிங்கை வைத்து மூடி மடலையும் எல்லாப் பக்கங்களிலும் செவ்வகப் பொட்டலம்போல் மூடி நூலால் கட்டி இட்லி பாத்திரத்தில் 30 நிமிடம் ஆவியில் வேகவைத்துத் தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...