எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

MASAAL VADAI.. மசால் வடை.

MASAAL VADAI :-
NEEDED:-
CHANNA DHAL - 1 CUP
ONION CHOPPED - 1 NO
RED CHILLI - 1 NO
GREEN CHILLI - 1 NO.
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
COCONUT - 2 INCH SQUARE. ( MAKE INTO SMALL PIECES)
CURRY LEAVES. - 4 ARKS
SALT - 1/2 TSP.
OIL FOR FRYING - 200 GMS.

METHOD :-
WASH AND SOAK CHANNA DHAL FOR 2 HOURS. DRAIN THE WATER . IN A MIXIE PUT GREEN CHILLI., RED CHILLI., SOMPH., JEERA., COCONUT., CURRY LEAVES., SALT., RUN FOR ONE MINUTE. THEN ADD DHAL AND AGAIN RUN IT FOR ONE MINUTE. TAKE IT AND MIX IT WITH ONION. MIZ WELL AND DIVIDIE THE DOUGH INTO 12 EQUAL PARTS . MAKE A BALL EACH AND FLATTEN THEM WITH HAND . DEEP FRY IN OIL IN A MEDIUM FIRE. SERVE IT WITH MIXED RICES .,SAMBAR SATHAM OR CURD RICE., OR AS A EVE SNACK..WITH CHUTNEYS OR SAUCES.

மசால் வடை :-
தேவையானவை :-
கடலைப் பருப்பு - 1 உழக்கு
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
வரமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் சதுரம்
கருவேப்பிலை - 4 ஆர்க்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் பொறிக்க - 200 கிராம்.

செய்முறை :-
கடலைப் பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து வைக்கவும். மிக்ஸியில் வரமிளகாய்., பச்சை மிளகாய்., சோம்பு., சீரகம்., உப்பு., தேங்காய் ., கருவேப்பிலை போட்டு ஒரு நிமிஷம் அரைக்கவும். பின் பருப்பைப் போட்டு அரைக்கவும். இந்த விழுதுடன் வெங்காயத்தைப் போட்டுப் பிசையவும். 12 சம உருண்டைகளாக செய்து உருட்டி தட்டையாக்கி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். இதை கலவை சாதங்கள்., சாம்பார் சாதம்., தயிர் சாதம்., அல்லது மாலை சிற்றுண்டியாக சட்னிகளுடனோ., சாஸுடனோ சாப்பிடலாம்..

திங்கள், 27 செப்டம்பர், 2010

LEMON RICE.. எலுமிச்சை சாதம்

LEMON RICE :-
COOKED RICE - 2 CUPS.
LEMON JUICE - 1 TBLSPN.
TURMERIC POWDER - 1 PINCH.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
RED CHILLIES - 2 HALVED.
GREEN CHILIES - 2 HALVED
CURRY LEAVES - 1 ARK
SALT - 3/4 TSP
OIL - 3 TSP
FRIED GROUNDNUT AND CASHEWS - 1 TBLSPN OPTIONAL.

METHOD:-
HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHENIT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD CHANNA DHAL. THEN ADD RED CHILLIES .,GREEN CHILLY., CURRY LEAVES . THEN ADD TURMERIC POWDER AND SALT . ALONG WITH LEMON JUICE. SWICH OFF THE GAS.. ADD RICE IN IT STIRR WELL. IF DESIRES ADD FRIED GROUND NUT AND CASHEWS. ITS BEST WITH PAPPAD AND THEENGAYTH THUVAIYAL OR ANY KARAP PORIYAL.

எலுமிச்சை சாதம்:-
தேவையானவை :-
சாதம் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2 ரெண்டாகக்கிள்ளியது
பச்சை மிளகாய் - 1 ரெண்டாகக் கிள்ளியது.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை ., முந்திரி - 1 டேபிள்ஸ்பூன் விரும்பினால்.

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்துபோடவும். சிவந்தவுடன் கடலைப் பருப்பு., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., பச்சை மிளகாய் ., கருவேப்பிலை., உப்பு., மஞ்சள் பொடி போடவும். எலுமிச்சை சாறை ஊற்றி அடுப்பை அணைக்கவும். சாதத்தை கொட்டி நன்கு கிளறவும்.. விரும்பினால் வறுத்த வேர்க்கடலை ., முந்திரி சேர்க்கவும். அப்பளம்., தேங்காய்த்துவையல் அல்லது காரப் பொரியலுடன் பரிமாறவும்.

சனி, 25 செப்டம்பர், 2010

BEANS PORIYAL. பீன்ஸ் பொரியல்..

BEANS PORIYAL :-
NEEDED :-
BEANS - 250 GMS
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
RED CHILLI - 1 HALVED
CURRY LEAVES - 1 ARK
SALT 1/2 TSP
OIL - 1 TSP
CRATED COCONUT OR PARABOILED DHAL - 1 TBLSPN OPTIONAL.

METHOD:-
WASH AND CUT BEANS IN TO TINY RINDS.
HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL . WHEN URAD DHAL BECOMES BROWN ADD CHILLI ., CURRY LEAVES AND BEANS.
SAUTE WELL ADD SALT AND COVER IT . COOK FOR 5 MIN IN SIM AND ADD CRATED COCONUT OR PARABOILED DHAL. SERVE IT WITH SAMBAR RICE OR VATHAK KUZAMBU RICE AS A SIDE DISH. OR U CAN HAVE IT PLAIN .

பீன்ஸ்பொரியல் :-
தேவையானவை :-
பீன்ஸ் - 250 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 ரெண்டாகக் கிள்ளியது.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் அல்லது பதமாய் வேகவைத்த பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் விரும்பினால்.

செய்முறை :-
பீன்ஸை கழுவி சின்ன வளையங்களாக நறுக்கவும்.
பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும் ., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை., பீன்ஸை சேர்க்கவும். நன்கு வதக்கி உப்பு சேர்த்து மூடி போட்டு மெல்லிய தீயில் 5 நிமிடம் வேகவைத்து தேங்காய்த்துருவல்., அல்லது வேகவைத்த பருப்பு சேர்க்கவும். இறக்கி சாம்பார் சாதம் அல்லது வத்தக் குழம்பு சாதத்துடன் பரிமாறவும். அல்லது ப்ளெயின் பொரியலாகவும் சாப்பிடலாம்..

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

VEG ,.THUUL BAJJI.. வெஜிடபிள் தூள் பஜ்ஜி..

THUUL BAJJI..:-
NEEDED :-
GRAM FLOUR (BASEN ) - 100 GMS.
MAIDA - 20 GMS.
CORN FLOUR - 20 GMS.
RED CHILLI POWDER - 1/2 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH.
RED FOOD COLOUR - 1 PINCH
SALT - 1/2 TSP
OIL FOR FRYING..( 150 GMS)
ASSORTED VEGETABLES - 1 CUP ( CUT INTO THIN STICKS)
(HERE WE USE .. POTATO., PLANTAIN AND AUBERGINE)
IF DESIRES ADD LADIES FINGER ., CARROT AND BEANS..

METHOD :-
ADD GRAM FLOUR, MAIDA., CORN FLOUR ., CHILLI PWDR., ASAFORTIDA., SALT., RED FOOD COLOUR . AND .. ADD THE VEGETABLES IN IT .. STIRR WELL.. NO NEED TO ADD WATER.. THE WATER IN THE VEG IS ENOUGH.
HEAT OIL IN A PAN ..DROP A HANDFUL OF DOUGH BY SPREADING IT IN OIL .. FRY WELL TILL CRISPY .. AND SERVE IT WITH SAUCES OR COCONUT CHUTNEY.

THIS IS SERVED AS A PREVIOUS DAY EVENING TIFFIN IN THE WEDDING CEREMONY OF CHETTINADU..

தூள் பஜ்ஜி:-
தேவையானவை :-
கடலை மாவு - 100 கிராம்.
மைதா - 20 கிராம்
சோளமாவு - 20 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க..
கலவைக் காய்கள் - 1 கப் (மெல்லிய குச்சிகள்)
( கத்திரி., வாழை., உருளை இங்கு உபயோகித்து இருக்கோம்)
விரும்பினால்.. வெண்டை., காரட் ., பீன்ஸ் சேர்க்கலாம்..

செய்முறை :-
கடலை மாவு., மைதா., சோள மாவு ., உப்பு ., பெருங்காயப் பொடி., மிளகாய்த்தூள்., ரெட் ஃபுட் கலர்., கலவைக் காய்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிசையவும்.. தண்ணீர் விட வேண்டாம்.. காய்களில் உள்ள தண்ணீர்ச் சத்தே போதும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து ஒரு கை நிறைய மாவை எடுத்து உதிர்த்தது போல் தூவிவிடவும்.. நன்கு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து சாஸ்கள் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்..

இது செட்டிநாட்டுத் திருமணங்களில் இடைவேளைப் பலகாரமாக இடம் பெறும்.

புதன், 22 செப்டம்பர், 2010

SPROUTED GREEN GRAM DOSA.. முளைவிட்ட பச்சைப் (பாசிப்) பயறு தோசை..


SPROUTED GREEN GRAM DOSA..:-
NEEDED;-
GREEN GRAM - 200 GMS.
BIG ONION - 1 CHOPPED
BEETROOT - 1/8 PIECE..
GREEN CHILLI - 1 NO.
GARLIC - 3 PODS.
GINGER - 1 INCH PIECE
RED CHILLI POWDER - 1/4 TSP
CRATED COCONUT - 1 TBLSPN
CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED.
JEERA - 1 TSP .
SALT - 1 TSP
OIL - 20 GMS.
METHOD :-
WASH AND SOAK GREEN GRAM PREVIOUS DAY ITSELF AND AFTER 4 HOURS DRAIN THE WATER AND MAKE A BUNDLE WITH MUSLIN CLOTH OR COTTON CLOTH AND HANG IT OVERNIGHT OR KEEP IT IN A TIFFIN BOX OR CASSAROLE TIGHTLY COVERED .THE NEXT DAY MORNING IT SPROUTS .
TAKE THE SPROUTED GRAM ., CHILLI., GINGER., GARLIC., JEERA., BEETROOT., ONION., COCONUT ., SALT ., RED CHILLI POWDER ., CORRIANDER LEAVES IN A MIXER JAR AND GRIND COARSLY.
HEAT THE DOSA PAN . , AND SPREAD IT AS THIN DOSAS. POUR 1/2 TSP OIL AROUND IT.AND COOK WELL.. IT WILL TAKE TIME (5 MIN FOR A DOSA) . SO KEEP IT IN SIM AND COOK WELL .TURN THE OTHER SIDE ALSO . OTHERWISE CANT ABLE TO EAT .
SERVE HOT WITH SUNDAIKKAY THUVAIYAL OR KATHAMBA CHUTNEY.
பச்சைப் (பாசிப்) பயறு தோசை:-
தேவையானவை :-
பச்சைப் (பாசிப்) பயறு - 200 கிராம்.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
பீட்ரூட் - 1 /8 துண்டு.
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3 பல்
இஞ்சி - 1 இன்ச் துண்டு
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி இலை - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 20 கிராம்.
செய்முறை :-
பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைக்கவும். 4 மணி நேரம்கழித்து தண்ணீரை வடித்து மஸ்லின் துணி அல்லது காட்டன் துணியில் இறுக்க மூட்டையாகக் கட்டி தொங்கவிடவும் இரவு முழுவதும்..அல்லது ஒரு டிஃபன் பாக்ஸில் அல்லது காஸரோலில் போட்டு டைட்டாக மூடி வைக்கவும். மறுநாள் காலை முளை விட்டு இருக்கும்..
இந்த முளைவிட்ட பயறு., பச்சை மிளகாய்., இஞ்சி., பூண்டு., மிளகாய்ப் பொடி., உப்பு., ஜீரகம்., தேங்காய்த்துருவல்., பீட்ரூட்., கொத்துமல்லித்தழை., வெங்காயம் எல்லாம் போட்டு கரகரப்பாக அரைக்கவும் .
தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாகத் தடவி எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நிதானமான தீயில் நன்கு வேகவைத்து எடுக்கவும். நன்கு வேகாவிட்டால் சாப்பிட முடியாது.. சூடான தோசையை சுண்டைக்காய்த் துவையல் அல்லது கதம்பச் சட்னியோடு பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...