எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஜூலை, 2022

சுக்குடிக்கீரை கழனிச்சாறு

சுக்குடிக்கீரை கழனிச்சாறு


 

தேவையானவை:- மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும், அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்,சீரகம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும், உப்பு - 1/2 டீஸ்பூன்

 

செய்முறை:- கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.

 

வியாழன், 28 ஜூலை, 2022

ஆலு மேத்தி

ஆலு மேத்தி


 

தேவையானவை :- அவித்த உருளைக்கிழங்கு – 2, வெந்தயக் கீரை – 1 கட்டு, மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்- 3 டீஸ்பூன்,சீரகம் – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரிந்தது.

 

செய்முறை:- அவித்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து உதிர்த்து வைக்கவும். வெந்தயக் கீரையை அலசிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துச் சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தயக்கீரையைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள்சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் உதிர்த்த உருளையைச் சேர்த்து நன்கு சுருளக்கிளறி இறக்கவும். சப்பாத்தியுடன் பரிமாறவும்.

 

ஞாயிறு, 24 ஜூலை, 2022

துளசி ரொட்டி

துளசி ரொட்டி

 


தேவையானவை :- புழுங்கல் அரிசி – 2 கப், பச்சரிசி – 1 கப், சீரகம் – 1 டீஸ்பூன், துளசி – ஆய்ந்தது ½ கப், சின்ன வெங்காயம் – 6 பொடியாக நறுக்கவும்., உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி.

 

செய்முறை:-பச்சரிசி புழுங்கல் அரிசி இரண்டையும் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். கெட்டியாக அரைத்து ஒரு துணியில் போட்டு வைக்கவும். துளசியைக் கழுவி கெட்டியாக அரைக்கவும். மாவை ஒரு பேசினில் போட்டு அரைத்த துளசி, சீரகம் ( கையால் கசக்கிப் போடவும். ). பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு சேர்த்துப் பிசைந்து எண்ணெய் தடவிய ஷீட்டில் ரொட்டிகளாக தட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். கதம்பச் சட்னியுடன் பரிமாறவும்.

 

வியாழன், 21 ஜூலை, 2022

கோஸ் சௌமின்

கோஸ் சௌமின்


 

தேவையானவை:- பச்சை முட்டைக் கோஸ் இலைகள் ஆறு, சைனீஸ் நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், வெங்காயம் – 2, சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், க்ரீன் சில்லி சாஸ் – 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன். சீனி – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

 

செய்முறை:- சைனீஸ் நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து வடிகட்டவும். பச்சை நிற முட்டைக் கோஸின் இலைகளையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கவும். கைப்பிடி உள்ள அகலமான பேனில் எண்ணெயைக் காயவைத்து ஹைஃப்ளெமில் வெங்காயம், பச்சை முட்டைக் கோஸ், உப்பு, சீனி, நூடுல்ஸ், க்ரீன் சில்லி சாஸ், தக்காளி சாஸ், கடைசியாக சோயா சாஸ் இந்த வரிசையில் போட்டு பானை நன்கு குலுக்கி விட்டு வேகவைத்து எடுக்கவும்.  

 

சனி, 16 ஜூலை, 2022

சோம்பு இலை ரொட்டி

சோம்பு இலை ரொட்டி


 

தேவையானவை :- அரிசி மாவு – 1 கப், சோம்பு இலை – ஆய்ந்தது ½ கப், கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய் 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், கேரட் திருகியது – 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன் , தயிர் – அரை கப், எண்ணெய் – 20 மிலி.


 

செய்முறை:- கடலைப்பருப்பை கழுவிப் பத்து நிமிடம் ஊறவைக்கவும். அரிசி மாவை ஒரு பேஸினில் போட்டுப் பெருங்காயம், உப்பு, சீனியைப் போட்டுக் கலக்கவும். சோம்பு இலையைப் பொடியாக அரிந்து போடவும். பச்சைமிளகாய் சீரகத்தைக் கொரகொரப்பாக இடித்துச் சேர்க்கவும்.  பொடியாக அரிந்த வெங்காயம், தயிரைச் சேர்க்கவும். கடலைப்பருப்பை நீரில்லாமல் போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் எலுமிச்சை அளவு மாவை எடுத்து ரொட்டிகளாக தட்டிச் சுட்டெடுத்துத் தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...