ரோஜாப்பூ சட்னி
தேவையானவை :-மிளகாய் – 30, சின்ன வெங்காயம் – 10, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.
செய்முறை :- வரமிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அல்லது அம்மியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கால் கப் தண்ணீரில் பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து வட்ட வட்டமாக நைசாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும். நைசாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும் வரை வதக்கவும். அதில் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு ஒரு நிமிடத்தில் இறக்கிவிடவும். இதில் சின்ன வெங்காயம் ரோஜா இதழ்கள் போல சிவப்பாக இருப்பது அழகு & ருசி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக