சின்ன வெங்காய மசாலா
தேவையானவை:- சின்ன வெங்காயம் – 2 கப் உரித்தது, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன், சோம்புப் பொடி – கால் டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:- சின்ன வெங்காயத்தை நீளமாக நான்காக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இரு நிமிடம் வதக்கி இதில் உப்பு, மிளகாய்த்தூள், சோம்புப் பொடி போட்டு நன்கு கலக்கவும். இன்னும் இரு நிமிடங்கள் வதக்கி சப்பாத்தி, தோசை, தயிர்சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக