எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 அக்டோபர், 2023

ஜாலர் அப்பம்

ஜாலர் அப்பம்


தேவையானவை:- கோதுமை மாவு – 2 கப், முட்டை – 1, தேங்காய் – பாதி, உப்பு - 1 சிட்டிகை, சீனி – கால் கப். எண்ணெய் – 30 மிலி, ஜாலர் கோன்.

செய்முறை:- தேங்காயைத் துருவி இரண்டு கப் பால் எடுக்கவும். இதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு, கால் கல் சீனி சேர்த்து நன்கு கலக்கவும். கோதுமை மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும். நான் ஸ்டிக் தவாவை சூடு பண்ணி எண்ணெய் தடவி ஜாலர் கோனில் மாவை ஊற்றி வட்ட வட்டமாக மாவு விழும்படி சுழற்றவும். முழுவதும் வலைப்பின்னல் போல வந்ததும் நிறுத்தவும். எண்ணெய் தடவி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து தேன் தடவி சுருட்டிப் பரிமாறவும்.

சனி, 28 அக்டோபர், 2023

22.கொய்யாக்காய் குழம்பு

22.கொய்யாக்காய் குழம்பு

 

தேவையானவை:- முக்கால் பழுத்த கொய்யாக்காய் – 1, தக்காளி -1, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர்/மாங்காய்ப்பொடி – அரை டீஸ்பூன், சீனி – ஒரு சிட்டிகை, வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – சிறிது.

 

செய்முறை:- கொய்யாக்காயைத் துண்டுகள் செய்யவும். கொட்டை உள்ள சதைப்பகுதியை அரைத்து வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி போட்டு அதில் துண்டுகளாக வெட்டிய கொய்யா தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், ஆம்சூர் பொடி, சீனி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி கால் கப் தண்ணீர் விட்டு நன்கு மூடி சிம்மில் வேகவிடவும். வெல்லத்தையும் போட்டு நான்கு நிமிடம் கழித்து இறக்கி கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

புதன், 25 அக்டோபர், 2023

நொறுக்குத்தீனி ரெஸிப்பீஸ்

நொறுக்குத்தீனி ரெஸிப்பீஸ்



1.ஜாலர் அப்பம்

2.சன்னா வடை

3.தட்டுவடை செட்

4.மூங்தால் சாட்

5.எள், கடலை சிக்கி

6.உருளை இனிப்பு ஃபிங்கர் சிப்ஸ்

7.சிப்பி சோஹி

8.இனிப்பு களியோடக்கா

9.தக்காளி கட்லெட்
10.வெஜிடபிள் ஆம்லெட்
11.ட்ரைஃப்ரூட்ஸ் சமோசா
12.கோதுமை போண்டா

13.கருணைக்கிழங்கு சாசேஜ்

14.மினி பஃப்ஸ்


15.பீட்ரூட் பகோடா

16.கேரட் குல்ஃபி

17.ஃப்ரூட் பாப்சிக்கிள்

18.சில்லி பரோட்டா

19.பனானா டிலைட்

20.லெமன் பாஸ்தா



இந்த ரெஸிப்பீஸ் 15.6.2023 குமுதம் சிநேகிதியில் குட்டீஸுக்குப் பிடித்த ஈவினிங் ஸ்நாக் ரெஸிப்பீஸ் என்ற தலைப்பில் வெளியானது

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

சாபுதானா கிச்சடி

சாபுதானா கிச்சடி



தேவையானவை:- ஜவ்வரிசி – 1 கப்எண்ணெயும் நெய்யும் கலந்து – 1 டேபிள் ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1 சிட்டிகைசீரகம் – ½ டீஸ்பூன்பச்சைமிளகாய் – 2 இரண்டாக கீறவும்., வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்கடலைப்பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்உளுந்து – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1 இரண்டாக கிள்ளவும்., இஞ்சி – 1 இன்ச்  - துருவவும்., ( பனீர் – 20 கி துண்டுகளாக்கியதுவிரும்பினால் சேர்க்கவும் ), உருளைக்கிழங்கு – 1 சிறியதுஉப்பு – ½ டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்கொத்துமல்லிகருவேப்பிலை – பொடியாக அரிந்தது 1 டீஸ்பூன்.

செய்முறை:- ஜவ்வரிசியைக் கழுவி சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்உருளையைத் தோல்சீவி சதுரத் துண்டுகளாக்கவும்பனீரையும் சதுரத் துண்டுகளாக்கவும்கடாயில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கி உருளையும் பன்னீரும் பொன்னிறமாகும்வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.. அதே எண்ணெயில் சீரகம்பெருங்காயத்தூள்பச்சைமிளகாய்வரமிளகாய்இஞ்சிவேர்க்கடலைகடலைப்பருப்புப் போட்டுத் தாளிக்கவும்ஊறவைத்த ஜவ்வரிசியை உப்பு சேர்த்து ( விரும்பினால் சிறிது மிளகும் சேர்த்து ) கரண்டியால் நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மெல்லிய தீயில் மூடி போட்டு வேக விடவும்ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வெந்ததும் உருளைபனீர்துண்டுகள் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி கருவேப்பிலை கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

செவ்வாய், 17 அக்டோபர், 2023

ஜவ்வரிசி பொங்கல்

ஜவ்வரிசி பொங்கல்



தேவையானவை:- ஜவ்வரிசி - 1 கப், பச்சரிசி – கால் கப், பாசிப் பருப்பு - 1/2 கப்பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்இஞ்சி – சிறு துண்டுசீரகம் - 1 டீஸ்பூன்மிளகு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்நெய் - 2 டீஸ்பூன்உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்குமுந்திரி – 6

செய்முறை:- ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.  பச்சரிசியையும் பாசிப்பருப்பையும்  கழுவி வேகவிடவும். இதில்  பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய், பொடியாக அரிந்த இஞ்சி சேர்த்து  வேக விடவும்நன்கு மலர்ந்ததும் ஜவ்வரிசி சேர்த்துக் கிளறவும். ஒன்று சேர்ந்ததும்  உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம்மிளகு சேர்த்துப் பொறிந்ததும்முந்திரி சேர்த்து பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும்நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்

Related Posts Plugin for WordPress, Blogger...