எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஜூலை, 2024

16.ஹனிம் கோபெகி

16.ஹனிம் கோபெகி


தேவையானவை:- மைதா – 3 ½ கப், வெண்ணெய் – ஒரு துண்டு, சீனி – 1 டேபிள் ஸ்பூன், முட்டை – 3, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 கப், யோகர்ட் – அரை கப், சிரப் செய்ய:– சீனி – 2 கப், தண்ணீர் – 2 கப், எலுமிச்சை சாறு – சில துளிகள்.

செய்முறை:- ஒரு பௌலில் வெண்ணெய், யோகர்ட், உப்பு, சீனி, முட்டை, இரண்டு கப் தண்ணீர் போட்டுக் கரைத்து மைதாவைப் போட்டு நன்கு பிசையவும். 2 கப் தண்ணீரில் 2 கப் சீனி சேர்த்து சிரப் செய்து வைக்கவும். பிசைந்த மாவை வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சீனிப்பாகில் நனைத்துப் பரிமாறவும்.

ஞாயிறு, 28 ஜூலை, 2024

15.டெமிர் டாட்லிஸி

15.டெமிர் டாட்லிஸி



தேவையானவை:- யோகர்ட் – 1 கப், மைதா – முக்கால் கப், முட்டை – 10, உப்பு – 1 ஸ்பூன், சீனி – 1 கிலோ, எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன். டிசைன் அச்சு முறுக்கு அச்சு ஒன்று. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- சீனி மூழ்கும் வரை நீர் ஊற்றி கெட்டிப் பாகு தயாரிக்கவும். இதில் எலுமிச்சைச் சாறை ஊற்றிக் கலக்கவும். ஒரு பௌலில் யோகர்ட்டையும் மைதாவையும் சேர்த்துக் கட்டிகளில்லாமல் நன்கு கலக்கவும். முட்டைகளை ஒவ்வொன்றாகச் சேர்த்துத் தோசை மாவுப் பதத்தில் கரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து அச்சு முறுக்கு டிசைன் இரும்புக் கம்பியைப் போட்டு வைக்கவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அச்சை எடுத்துத் தட்டையான பாத்திரத்தில் வைத்த மாவில் படுக்கை வசமாக நனைத்து எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். ஒரு இரும்புக் குச்சியால் அச்சிலிருந்து மாவை எடுத்து விடவும். திருப்பி விட்டு சிவப்பாகப் பொரிந்ததும் எடுத்து உடனே சீனிப்பாகில் ஊறவைத்து உபயோகிக்கவும்.

திங்கள், 22 ஜூலை, 2024

14.மார்ஸிபான்

14.மார்ஸிபான்


தேவையானவை:- பாதாம் பவுடர் – 165 கி, ஐஸிங் சுகர் - 165 கி, முட்டை – 1, ஆல்மோண்ட் எஸன்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:- பாதாம் பவுடர், ஐசிங் சுகார், முட்டை , ஆல்மோண்ட் எசன்ஸ் சேர்த்து ஒரு ப்ளெண்டரில் போட்டு நன்கு கலக்கவும். அதை பாதாம் பவுடர் தூவிய டேபிளில் போட்டு நன்கு பிசைந்து உருளையாக உருட்டி மில்க் பர்பி ஃபோல் ஒரு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும்.

சனி, 20 ஜூலை, 2024

12.லோகும்

12.லோகும்



தேவையானவை:- சீனி – 4 கப், தண்ணீர் – ஒன்றரை கப், எலுமிச்சைத் துண்டு – 1, மாதுளை – 4, தண்ணீர் – 1 கப், கார்ன்ஸ்டார்ச் – 1 கப், ஜெலாட்டின் – 10 கிராம், காய்ந்த தேங்காய்த்துருவல் – 1 கப், உடைத்த முந்திரி – கால் கப்.

செய்முறை:- நாலு கப் சீனியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைத் துண்டைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைத் துண்டை நீக்கவும். நான்கு மாதுளைகளைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டவும். இது இரண்டு கப் அளவு இருக்க வேண்டும். இதை ஒரு பானில் ஊற்றி அதில் கார்ன் ஸ்டார்ச், ஜெலாட்டின், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். திக்காக ஆகும்போதெல்லாம் சீனி சிரப்பை ஊற்றிக் கிளறி வரவும். 45 நிமிடங்கள் கிளறியபின் இறுகி வரும்போது உடைத்த முந்திரி சேர்த்துக் கிளறவும். ஒரு கண்ணாடி பௌலில் தேங்காய்த்துருவலை அடர்த்தியாகத் தூவி அதில் லோகுமைப் பரப்பவும். மேலேயும் தேங்காய்த்துருவலைத் தூவி சிறிது ஆறவிடவும். கூர்மையான கத்தியால் இரண்டு இஞ்ச் சதுரத் துண்டுகளாக வெட்டித் தேங்காய்த்துருவலில் புரட்டிப் பரிமாறவும்.

வியாழன், 18 ஜூலை, 2024

11.பிஸ்மானியி

11.பிஸ்மானியி


தேவையானவை:- சீனி – 6 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – 1 கப், மைதா – 2 கப், சன்ஃப்ளவர் எண்ணெய் – 1 கப், வனிலா பவுடர் – 5 கிராம், காய்ந்த தேங்காய்த்துருவல் – 2 கப், பொடித்த சீனி – 5 கப்.

செய்முறை:- அவனை 340 டிகிரி முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் பேப்பரைப் பரப்பி வைக்கவும். ஒரு பவுலில் வெண்ணெயையும் சீனியையும் அடித்துச் சேர்த்து அத்துடன் மாவையும் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கலக்கவும். எண்ணெயை சிறிது சிறிதாகச் சேர்த்து மடித்துப் பிசையவும். தேங்காய்த் துருவலையும் வனிலா பவுடரையும் சேர்த்துப் பிசையவும். இந்த மாவை ஃப்ரிட்ஜில் 2 – 3 மணி நேரம் வைக்கவும். எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்து பேக்கிங் ட்ரேயில் அடுக்கி 170 டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்யவும். ஆறியதும் தேங்காத்துருவல், சீனிப் பொடி தூவிப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...