ட்ரைகலர் கேப்ஸிகம் செமோலினா
தேவையானவை :- கோதுமை சேமியா - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கியது., பச்சை மிளகாய் - 1 வகிர்ந்தது. பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளகாய் – நீளமாக அரிந்தது – ஒரு கப், பூண்டு – 4 பொடியாக அரியவும். வெங்காயத்தாள் – 2 பொடியாக அரியவும். எண்ணெய் + வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், ஜீனி – அரை டீஸ்பூன், உப்பு- அரை டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன், டொமாடோ சாஸ், க்ரீன் சில்லி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை :- கோதுமை சேமியாவை வெது வெதுப்பான நீரில் நனைத்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும். பானில் எண்ணெய் + வெண்ணையைக் காயவைத்துப் பொடியாக அரிந்த பூண்டு ஜீனி சேர்த்து வதக்கவும். அதன் பின் வெங்காயத்தாள், பச்சைமிளகாய், வெங்காயம், குடைமிளகாய்களைப் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். இதில் சோயா சாஸ், டொமாடோ சாஸ், க்ரீன் சில்லி சாஸ் சேர்த்து வதக்கி சேமியாவைச் சேர்த்து வொயிட் பெப்பர் பொடியைத் தூவி குழையாமல் பிரட்டிக் கிளறி இறக்கவும். மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக