ஃப்ரூட் ஃபலூடா
தேவையானவை:- சேமியா – 1 கைப்பிடி, ரோஸ் மில்க் சிரப் – 2 டேபிள் ஸ்பூன், ஜெல்லி – ஒரு கப், பொடியாக அரிந்த பழக்கலவை – ஒரு கப், சப்ஜா விதை – 1 டேபிள் ஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் – இரண்டு கப் , ஸ்ட்ராபெர்ரி – 4.
செய்முறை:- சேமியாவை வேகவைத்துக் குளிர்ந்த நீரில் வடிகட்டி வைக்கவும். ஜெல்லியை வெந்நீரில் கரைத்து சிறிது சீனி சேர்த்து வேகவைத்து துண்டுகள் செய்து வைக்கவும். சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊறப்போடவும். ஃபலூடா தயாரிக்கும் வரை ரோஸ் மில்க் மிக்ஸையும் பழங்களையும் ஜெல்லியையும் ஐஸ்க்ரீமையும் ஃபிரிட்ஜில் நன்கு குளிரவைக்கவும்.
உயரமான பலூடா க்ளாஸ்களில் முதலில் சேமியாவைப் போடவும். அதன்மேல் சிறிது பழங்களைத் தூவி இரண்டு டீஸ்பூன் ரோஸ் மில்க் சிரப் ஊற்றவும். அதன் மேல் ஜெல்லித்துண்டுகளைப் போடவும். அதன் மேல் ஒருடீஸ்பூன் ஊறிய சப்ஜா விதைகளைப் போடவும். பிறகு கொஞ்சம் பழத்துண்டுகள் தூவி அதன் மேல் ஒரு பெரிய ஸ்கூப் அளவு வெனிலா ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் ஒரு ஸ்ட்ராபெர்ரி வைத்துப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக