தஹி சேமியா
தேவையானவை :- சேமியா – 1 கப், புது தயிர் – 2 கப், நெய் – 1 டீஸ்பூன், முந்திரி – 10, கிஸ்மிஸ் – 10, பச்சை திராக்ஷை – 6, கறுப்பு திராக்ஷை – 6, ஆப்பிள் – 1 ஸ்லைஸ் தோலோடு துண்டு செய்யவும். வெள்ளரி – கால் பாகம் துண்டுகள் செய்யவும். செம்மாதுளை முத்துகள் – ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன். கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.
செய்முறை :- சேமியாவை ஒரு கப் தண்ணீரில் வேகவைத்து உப்பு சேர்க்கவும். தயிரைக் கடைந்து அதில் விதை எடுத்த கறுப்பு திராக்ஷை , பச்சை திராக்ஷையை இரண்டாக கட் செய்து போடவும், ஆப்பிள் வெள்ளரிக்காயை பல் பல்லாக துண்டு செய்து போடவும். மாதுளை முத்துக்களையும் சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து சேமியாவில் போட்டு கலக்கவும். நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்து இதில் போட்டு கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக