எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 செப்டம்பர், 2023

சேமியா இட்லி

சேமியா இட்லி



தேவையானவை- சேமியா – 2 கப், வெள்ளை ரவா – கால் கப், தயிர் – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், முந்திரி – 15, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – கரகரப்பாகப் பொடித்தது அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, இஞ்சித் துருவல்- அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2 பொடியாக அரிந்தது. கருவேப்பிலை – 1 இணுக்கு, கொத்துமல்லித்தழை, கேரட்துருவல்- தலா 2 டீஸ்பூன்.

செய்முறை:- கடாயில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கி முந்திரியைப் பொரித்து எடுக்கவும். அதே எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பைத் தாளித்து எடுத்துக்கொண்டு அதன் பின் சேமியாவைப் போட்டு வறுக்கவும். அதிலேயே ரவையையும் போட்டு வறுத்து ஒரு பெரிய பேஸினில் போடவும். இதில் தாளித்தது உப்பு, தயிர், துருவிய இஞ்சி, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை,பெருங்காயத்தூள், மிளகு சீரகப் பொடி, கேரட் துருவல் சேர்த்து நன்கு கலக்கி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இட்லிப் பாத்திரத்தில் துணி பரப்பி இவற்றை இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொத்துமல்லி, தேங்காய், தக்காளிச் சட்னிகளுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...