எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 ஜனவரி, 2011

SARKARAIP PONGAL .. சர்க்கரைப் பொங்கல்..


SARKARAIP PONGKAL..
NEEDED :-
RAW RICE - 1 CUP
MILK - 2 CUPS.
GREEN GRAM DHAL - 1/3 CUP
JAGGERY - 1CUP
GHEE - 1 TNLSPN
CARDAMOM - 4 NOS.
CASHEWS - 10 NOS
KISMIS - 10 NOS.
PACHAI KARPURAM - 1 PINCH ( OPTIONAL)

SARKKARAIP PONGKAL:-
MIX RICE AND GREENGRAM DHAL TOGETHER AND WASH WELL. PLACE IT IN A COOKER WITH 2 CUPS OF WATER PLUS 2 CUPS OF MILK. COOK FOR 3 WHISTLES AND SIMMER FOR FEW MINUTES. OPEN THE COOKER AFTER 10 MINUTES ADD JAGGERY AND STIRR WELL. IF NEEDED ADD BOILED MILK HALF CUP . WHEN THE JAGGERY MELTS SWITCH OFF THE STOVE. HEAT GHEE IN A PAN ADD CASHEWS AND KISMIS AND TOSS IT OVER THE PONGAL. POWDER THE CARDAMOM AND SPRAY ON TOP OF THE PONGAL . TO ADD FLAVOUR YOU CAN ADD A PINCH OF PACHAI KARPURAM. SERVE HOT. ITS DELICIOUS ONE AND SERVED IN PONGAL & MATTU PONGAL.

சர்க்கரைப் பொங்கல்:-
தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
பால் - 2 கப்
பாசிப்பருப்பு - 1 /3 கப்
வெல்லம் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
ஏலக்காய் - 4
முந்திரி - 10
கிஸ்மிஸ் - 10
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை ( விரும்பினால்)

செய்முறை:-
பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் + 2 கப் பால் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியபின் குக்கரைத் திறந்து வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் அரை கப் காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் கரைந்தபின் சில நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து முந்திரி., கிஸ்மிஸ் பழத்தை பொன்னிறமாக பொறித்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து தூவவும். சூடாக பரிமாறவும். ருசிமிக்க இது பொங்கல் ., மாட்டுப் பொங்கல் தினங்களில் செய்யப்படும்.

10 கருத்துகள்:

  1. ஆஹா நாவூறுது..2 படத்திலிருக்கும் அனைத்தையும் பிரான்ஸ்க்கு பார்சலில் அனூபவும் இல்லைன்னா சாமி கண்ணைக் குத்திடும் அக்கா..

    பதிலளிநீக்கு
  2. அக்கா..இது எல்லாம் பொங்கல் சாப்பாடா...அருமை...இப்படி எல்லாம் படத்தினை போட்டு ஆசை காட்ட கூடாது...

    //2 படத்திலிருக்கும் அனைத்தையும் பிரான்ஸ்க்கு பார்சலில் அனூபவும் இல்லைன்னா சாமி கண்ணைக் குத்திடும் அக்கா.//...பிரான்ஸுக்கு அனுப்ப வேண்டும்....முதல new york அனுப்புங்க...மிச்சம் இருந்த மேனகாவிற்கு நான் அனுப்புறேன்...

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப அருமை தேனக்கா

    விருந்து ரொம்ப பலமாக இருக்கே
    ஒரு சந்தேகம், இது வரை வாரம் ஒரு முரை எப்படியும் வெல்லம் சேர்த்து சமைக்கும் சமையல்.

    கரைத்து கொதிக்கவைத்து வடிகட்டிதான் செய்வேன்.

    னீங்கள் எல்லாம் செய்யும் பிள்ளை யார் அதன் பெயர் என்ன சொல்லுவீங்க மறந்து போச்சு வெஙக்யம் போல் ஷேப்பில் இருக்குமே/
    அதை நாஙக் வெல்லம் உருணடைம், ஆட்டே பாம், வணக்கம் என்று செய்வோம், உள்ளே வெல்லம் தேங்க்காய் வைத்து,.

    வெல்லம் பல வகை உண்டு , அதில் அப்படியே சேர்க்க்கும் வெல்லத்துக்கு என்ன பெயர்?
    .

    பதிலளிநீக்கு
  4. நிச்சயம் அனுப்புறேன் மேனகா.:))

    பதிலளிநீக்கு
  5. கீதா நீங்க மூணு பேரும் இங்கே வாங்க .. அக்கா வீட்டில் சாப்பிடலாம்..:))

    பதிலளிநீக்கு
  6. பிள்ளையார் சதுர்த்தியில் செய்யப்படும் அதன்பெயர் எருக்கலங் கொழுக்கட்டை.. ஜலீலா..

    அதில் அச்சு வெல்லம்., மண்டை வெல்லம் அது வேணாலும் சேர்க்கலாம்..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...