எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 24 அக்டோபர், 2013

KAALI DHAL MAKKHANI. கறுப்பு உளுந்து சப்ஜி.

KAALI DHAL MAKKHANI.  கறுப்பு உளுந்து வெண்ணெய் சப்ஜி.

KAALI DHAL MAKKHANI.
NEEDED:-
KAALI DHAL/URAD DHAL SPLITED - 1 CUP
RAJMA -  1/4 CUP ( OPTIONAL)
BIG ONION - 2 NOS. CHOPPED
GINGER GARLIC PASTE - 2 TSP
TOMATOS - 2 CHOPPED
ASAFOTIDA - 1 PINCH
RED CHILLI POWDER - 1 TSP
CORIANDER POWDER - 2TSP
FRESH CREAM - 2 TBLSPN
CUMIN SEEDS - 1 TSP
SALT - 1/2 TSP
OIL - 1 TBLSPN
GHEE - 2 TBLSPN


METHOD :-
SOAK URAD DHAL OVERNIGHT.ADD 3 CUPS WATER AND PRESSURE COOK FOR THREE WHISTLES.( IF DESIRED SOAK AND  PRESSURE COOK RAJMA TOO.)

HEAT OIL IN A PAN ADD THE ASAFOETIDA AND CUMIN SEEDS. WHEN IT SPLUTTERS ADD ONION, SAUTE WELL TILL IT BECOMES GOLDEN BROWN. ADD GINGER GARLIC PASTE. SAUTE TILL THE OIL SEPERATES. ADD THE TOMATOS WITH SALT, REDCHILLI POWDER, CORIANDER POWDER. SAUTE FOR A MINUTE AND THEN ADD THE BOILED URAD DHAL. ( AND RAJMA TOO ) .COOK FOR 5 MINUTES. BEAT THE CREAM WELL AND ADD THIS TO THE BOILING MIXTURE. HEAT THE GHEE IN A SEPERATE PAN AND POUR OVER THIS AND MIX WELL. SERVE HOT WITH ONION, CUCUMBER  SLICES FOR CHAPPATHIS/ RUMALI ROTIS/ NAANS.


கருப்பு உளுந்து சப்ஜி:-

தேவையானவை:-
கருப்பு உளுந்து இரண்டாக உடைத்தது - 1 கப்
ராஜ்மா - 1/4 கப் ( விரும்பினால்)
பெரிய  வெங்காயம் - 2 பொடியாக அரியவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 பொடியாக அரியவும்.
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
கறுப்பு உளுந்தம் பருப்பைத் தோலுடன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேக விடவும். ( விரும்பினால் ராஜ்மாவையும் முதல் நாள் ஊறவைத்து பிரஷர் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். )

ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பெருங்காயம், சீரகத்தைத் தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுனாகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.  பின் தக்காளி, உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், போட்டு வதக்கி வெந்த உளுந்தைச் சேர்க்கவும் ( ராஜ்மாவையும் சேர்க்கவும் ). 5 நிமிடம் வேகவைத்து க்ரீமை மத்தால் நன்கு கடைந்து ஊற்றவும். நெய்யைக் காயவைத்து ஊற்றி நன்கு கலக்கி ஸ்லைஸ் செய்த வெங்காயம் , வெள்ளரிக்காய் இவைகளோடு சப்பாத்தி, ருமாலி ரொட்டி, நான் ஆகியவற்றுக்கு சூடாகப் பரிமாறவும்.
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...