எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 அக்டோபர், 2013

ATHIRASAM. அதிரசம்.

ATHIRASAM. அதிரசம்.

NEEDED:-
RAW RICE - 4 CUPS
JAGGERY - 2 CUPS
CARDAMOM - 4 POWDERED.
GHEE - 1 TBLSPN.
OIL - FOR FRYING.

METHOD:-
WASH AND SOKA RAW RICE FOR 2 HOURS. DRAIN AND DRY IN A CLOTH. GROUND WHILE WET.SIEVE THE FLOUR.

POUR HALF CUP WATER IN JAGGERY AND MAKE A THICK SYRUP BY HEATING. KEEP TILL IT GETS PAGU PATHAM.

FILTER THE PAGU IN RICE FLOUR WITH CARDAMOM POWDER. MIX WELL WITH LITTLE GHEE AND KEEP ASIDE FOR 2 DAYS.

HEAT OIL IN A PAN. MAKE ATHIRASAMS IN A OILY PLASTIC SHEETS AND FRY THEM IN OIL. SERVE HOT.



ATHIRASAM. அதிரசம்.

தேவையானவை :-

பச்சரிசி - 4 கப்
வெல்லம் - 2 கப்
ஏலக்காய் - 4 பொடித்தது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி  2 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்து நிழலில் துணியில் உலரப் போடவும். ஈரமாக இருக்கும்போதே மாவாக அரைத்துச் சலிக்கவும்.

அரை கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் பாகு காய்ச்சவும். பாகு ஒட்டாமல் இருக்கும்போது இறக்கவும்.

பாகை அரிசி மாவில் வடிகட்டி ஏலத்தூள் சேர்த்துக் கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும்.

ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து அதிரசங்களை ஒரு எண்ணெய் தடவிய பாலிதீன் பேப்பரில் தட்டி வேக வைக்கவும். பொன்னிறமானதும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

 

4 கருத்துகள்:

  1. எல்லாம் சரிதான். மாவை கிண்டி ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி வைத்து இரண்டு நாட்கள் /மூன்று நாட்கள் கழித்து அதிரசம் பொரித்தால் அனைத்தும் மிருதுவாக வரும்.மாவை கிண்டி உடனே பொரித்தால் அழுத்தமாக இருக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  2. ஆம் மாணிக்கம். இரண்டு நாள் கழித்துத்தான் பொரிக்கச் சொல்லி இருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...