எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஜூலை, 2016

அர்பி டிக்கி ( சேம்பு ) - ARBI TIKKI, GOKULAM.

அர்பி டிக்கி:- ( சேம்பு )

தேவையானவை :-
சேப்பங்கிழங்கு – கால் கிலோ, வறுத்த கோதுமை மாவு – அரை கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி – கால் கப், பச்சைமிளகாய் இஞ்சி விழுது – 1 டீஸ்பூன், ஓமம் – 1 டீஸ்பூன், ராக் சால்ட் – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:-
சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசிக்கவும். அதில் வறுத்த கோதுமை மாவும் பச்சைமிளகாய் இஞ்சி விழுது, பச்சைப் பட்டாணி, ஓமம், ராக் சால்ட், கொத்துமல்லித்தழை போட்டு நன்கு பிசையவும். இதை எண்ணெய் தொட்டு வட்டமாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து லெமன் புதினா சட்னியுடன் பரிமாறவும். 

சேப்பங்கிழங்கில் கால்சியம் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளதால் எலும்பு வலிமை பெற உதவுது. நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட் புரதம் ஃபைபர் சத்து மலச் சிக்கலைப் போக்கும். மூல நோய், குடல் புண்களை ஆற்றும். செரிமானப் பிரச்சனைகள் வராது.

சேப்பங்கிழங்கில் இரும்புச்சத்து, புரதச்சத்து, விட்டமின் ஏ பி ஈ ஆகியன இருக்கின்றன. பார்வைத் திறனை அதிகரிக்கிறது. விட்டமின் ஈ தோலைப் பராமரிக்குது. உடல் எடையக் குறைக்குது. புற்றுநோய் வராமல் தடுக்குது. சோர்வைப் போக்குது. 

உடல் நலத்துக்குத் தேவையான 17 விதமான அமினோ அமிலங்களும் ஒமேகா 3 ஃபாட்டி அமிலங்களும் அடங்கியது. செலினியம் மக்னீசியம் அடங்கியது.

அடிக்கடி சாப்பிட்டால் சளி இருமல் வரும் என்பதால் அவ்வப்போது செய்து சாப்பிடலாம். உடல் நலத்தைக்காக்கலாம். 

ேம்பு வின்னுவோம் !. சம்பின்றி வாழுவோம். !!

ிஸ்கி:- இந்தெசிபி ஜூலை 2016 கோகுலத்ில் வெளியானு.  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...