எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

தேங்காய்ப்பால் வெல்லப் பாயாசம்

தேங்காய்ப்பால் வெல்லப் பாயாசம்



தேவையானவை :-  தேங்காய் – 1, அரிசிஒரு டீஸ்பூன்பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்வெல்லம் – 2 அச்சுஏலப்பொடி – 1 சிட்டிகைமுந்திரி கிஸ்மிஸ் – தலா – 4, நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :- தேங்காயைத் திருகி அரை கப் கெட்டிப் பால் எடுக்கவும்அதைத் தனியே வைத்து விட்டுஒரு கப் இரண்டாம் பாலும் ஒரு கப் மூன்றாம் பாலும் எடுக்கவும்அரிசி பருப்பை லேசாக வெதுப்பி கொரகொரப்பாகப் பொடிக்கவும்இதை மூன்றாம் பாலில் போட்டு வேகவிடவும்வெல்லத்தைத் தட்டி இரண்டாம் பாலில் போட்டுக் கரைத்து வடிகட்டி அரிசி பருப்பு நன்கு வெந்ததும் ஊற்றவும்ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும்நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போட்டு ஏலப்பொடி தூவவும்லேசாக ஆறியதும் முதல் பாலை ஊற்றவும்.

புதன், 23 ஏப்ரல், 2025

ஸ்வீட்கார்ன் பாயாசம்

ஸ்வீட்கார்ன் பாயாசம்



தேவையானவை:- ஸ்வீட் கார்ன் – 1 கப்பால்- 1 லிட்டர்நெய் – 1 டேபிள் ஸ்பூன்முந்திரி கிஸ்மிஸ் – தலா – 20, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்சர்க்கரை – அரை கப்பாதாம் – 6, ஏலப்பொடிகுங்குமப்பூ – தலா ஒரு சிட்டிகை,

செய்முறை:- ஸ்வீட்கார்னை நன்கு வேகவைக்கவும்இதில் பாதியை எடுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸ் பல்லுப்பல்லாக நறுக்கிய தேங்காய்ஸ்வீட் கார்ன் போட்டு வதக்கவும்இதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும்நன்கு கொதித்ததும் அரைத்த கார்ன் விழுதைச் சேர்த்து ஊற்றிக் கொதிக்க விட்டு சர்க்கரையைச் சேர்க்கவும்லேசாக சுண்டியதும் இறக்கி ஏலப்பொடி குங்குமப்பூ சேர்த்து பாதாமை பொடியாக நறுக்கித் தூவவும்.

 

திங்கள், 21 ஏப்ரல், 2025

நவதானியப் பாயாசம்

நவதானியப் பாயாசம்



தேவையானவை :- தினைசாமைவரகுராகிகம்புபார்லிதட்டைப் பயிறுசோளம்சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால் கப்பால் – ஒன்றரை லிட்டர்சர்க்கரை – முக்கால் கப்முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி -1 சிட்டிகைநெய்- 2 டீஸ்பூன்.

செய்முறை:- தினை சாமை வரகு ராகி கம்பு பார்லி தட்டைப்பயிறுசோளம்சிவப்புக்கைக்குத்தல் அரிசி ஆகியவற்றைச் சுத்தம் செய்து வெறும் வாணலியில் லேசாக வாசம் வருவரை வறுத்து மிஷினில் நன்கு நைஸாக அரைத்து வைக்கவும்இதில் ஒரு கப் மாவு எடுத்து இரண்டு டம்ளர் பாலில் கரைத்து இன்னொரு டம்ளர் பால் ஊற்றி வேக விடவும்நன்கு வெந்து மாவு ஒட்டாத பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்து மிச்ச பாலை ஊற்றி நன்கு கொதித்ததும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போட்டு ஏலப்பொடி தூவவும்.

புதன், 16 ஏப்ரல், 2025

மூங்கில் அரிசிப் பாயாசம்

மூங்கில் அரிசிப் பாயாசம்



தேவையானவை :- மூங்கில் அரிசி – 1 கப் , நாட்டுச் சர்க்கரை – அரை கப்ஏலப்பொடி – 1 சிட்டிகை,

செய்முறை :- மூங்கில் அரிசியை ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும்இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும்சர்க்கரை கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி தூவவும்விரும்பினால் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போடலாம்.

திங்கள், 14 ஏப்ரல், 2025

அரவணைப் பாயாசம்

அரவணைப் பாயாசம்



தேவையானவை:- சிவப்புக் கேரளா மட்டையரிசி/பாசுமதி அரிசி – கால் கப்மண்டை வெல்லம் – 1 கப் துருவியது , நெய் – 3 டேபிள் ஸ்பூன்ஏலக்காய் தூள் – 1 சிட்டிகைதேங்காய்ப் பல் – 1 டேபிள் ஸ்பூன்தண்ணீர் – ஒரு கப்

செய்முறை:- அரிசியைக் களைந்து வைக்கவும்வெல்லத்தில் சிறிது நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி வைக்கவும்நெய்யில் தேங்காயைப் பொன்னிறமாக வறுக்கவும்மிச்ச நெய்யில் அரிசியை லேசாக வறுத்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்சிறிது வெந்ததும் வெல்லப்பாகைச் சேர்த்து வேகவிடவும்நன்கு வெந்ததும் நெய்யில் வதக்கிய தேங்காய்த்துண்டுகள் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

வியாழன், 10 ஏப்ரல், 2025

தினை சப்போட்டா பாயாசம்

தினை சப்போட்டா பாயாசம்



தேவையானவை:- தினை – 1 கப்பால் அரை – லிட்டர்சப்போட்டா – 2, சர்க்கரை – அரை கப்ஏலத்தூள் – 1 சிட்டிகைநெய் – 2 டீஸ்பூன்பாதாம் , முந்திரிகிஸ்மிஸ் – தலா - 6

செய்முறை:- தினையை லேசாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்பாலைக் காய்ச்சவும்இதில் சிறிது எடுத்து ஆறவைக்கவும்சப்போட்டாவைத் தோலுரித்து கையால் மசித்து இந்தப்பாலில் சேர்க்கவும்மீதிப் பாலில் தினை மாவைப் போட்டு நன்கு கிளறி கொதிக்க விடவும்இரண்டு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும்நெய்யில் குச்சியாக நறுக்கிய பாதாம் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும்ஆறியபின் இதில் சப்போட்டா கரைத்த பாலை ஊற்றி ஏலப்பொடி போட்டு நன்கு கிளறி ப் பரிமாறவும்.

திங்கள், 7 ஏப்ரல், 2025

தாமரைவிதைப் பாயாசம்

தாமரைவிதைப் பாயாசம்



தேவையானவை:- பால் – 1 லிட்டர்தாமரை விதை – 1 கப் ( நான்கு துண்டுகளாக நறுக்கவும்), முந்திரிப்பருப்பு – 20 ( நான்காக ஒடிக்கவும்), பாதாம் பருப்பு – 20 ( துண்டுகளாக கத்தியில் நறுக்கவும் ), கிஸ்மிஸ் – 2 டேபிள் ஸ்பூன்பிஸ்தா – 1 டேபிள் ஸ்பூன்கொப்பரை – பட்டையாக சீவியது 1 டேபிள் ஸ்பூன்சீனி – ½ கப்ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன்

செய்முறை:- அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்பால் கொதிக்கும்போது நான்காக நறுக்கிய தாமரை விதைபாதாம்பிஸ்தாமுந்திரிகிஸ்மிஸ்பட்டையாகச் சீவிய கொப்பரை போட்டு வேக விடவும்அடிப் பிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.சிறு தீயில் அரைமணி நேரம் வெந்ததும் சீனி சேர்க்கவும்சீனி கரைந்து கொதித்ததும் ஏலப்பொடி தூவிக் கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைத்துப் பரிமாறவும்.

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

வரகரிசிப் பாயாசம்



வரகரிசிப் பாயாசம்

தேவையானவை :- வரகரிசி – அரை கப்பாசிப்பருப்பு -  ஒரு டேபிள் ஸ்பூன்வெல்லம் – அரை கப்பால் – 1 கப்ஏலப்பொடி – 1 சிட்டிகைமுந்திரி கிஸ்மிஸ் – தலா 10. நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- வரகரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்பாசிப்பருப்பை வறுத்து வரகரிசியில் போட்டுக் குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் விட்டு நான்கு விசில் சத்தம் வரும்வரை வேகவைக்கவும்வெந்ததும் நன்கு குழைத்து வெல்லம் போட்டுக்கொதிக்க விடவும்வெல்லம் கரைந்ததும் பால் ஊற்றி இறக்கி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்துப் போடவும்

Related Posts Plugin for WordPress, Blogger...