தேங்காய்ப்பால் வெல்லப் பாயாசம்
தேவையானவை :- தேங்காய் – 1, அரிசி- ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன். வெல்லம் – 2 அச்சு. ஏலப்பொடி – 1 சிட்டிகை. முந்திரி கிஸ்மிஸ் – தலா – 4, நெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை :- தேங்காயைத் திருகி அரை கப் கெட்டிப் பால் எடுக்கவும். அதைத் தனியே வைத்து விட்டு. ஒரு கப் இரண்டாம் பாலும் ஒரு கப் மூன்றாம் பாலும் எடுக்கவும். அரிசி பருப்பை லேசாக வெதுப்பி கொரகொரப்பாகப் பொடிக்கவும். இதை மூன்றாம் பாலில் போட்டு வேகவிடவும். வெல்லத்தைத் தட்டி இரண்டாம் பாலில் போட்டுக் கரைத்து வடிகட்டி அரிசி பருப்பு நன்கு வெந்ததும் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போட்டு ஏலப்பொடி தூவவும். லேசாக ஆறியதும் முதல் பாலை ஊற்றவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக