எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 ஏப்ரல், 2025

ஸ்வீட்கார்ன் பாயாசம்

ஸ்வீட்கார்ன் பாயாசம்



தேவையானவை:- ஸ்வீட் கார்ன் – 1 கப், பால்- 1 லிட்டர், நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா – 20, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – அரை கப். பாதாம் – 6, ஏலப்பொடி, குங்குமப்பூ – தலா ஒரு சிட்டிகை,

செய்முறை:- ஸ்வீட்கார்னை நன்கு வேகவைக்கவும். இதில் பாதியை எடுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸ் பல்லுப்பல்லாக நறுக்கிய தேங்காய், ஸ்வீட் கார்ன் போட்டு வதக்கவும். இதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரைத்த கார்ன் விழுதைச் சேர்த்து ஊற்றிக் கொதிக்க விட்டு சர்க்கரையைச் சேர்க்கவும். லேசாக சுண்டியதும் இறக்கி ஏலப்பொடி குங்குமப்பூ சேர்த்து பாதாமை பொடியாக நறுக்கித் தூவவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...