சும்மா குழம்பு
தேவையானவை:- சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும், பூண்டு - 2 பல், புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு.
செய்முறை:- சின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து வட்டமாக நைசாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் சோம்பு, வெந்தயம் போடவும். அதில் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போடவும். 2 நிமிடம் வதக்கிப் புளிக்கரைசலை ஊற்றவும். பொங்கி நுரைத்து வரும்போது இறக்கி சூடாக இட்லி அல்லது சாதத்தோடு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக