எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பனீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மே, 2020

ஷெஷ்வான் பெப்பர் பனீர்.


ஷெஷ்வான் பெப்பர் பனீர் :-

தேவையானவை :- 100 கிராம் மில்கிமிஸ்ட் பனீர் -  ஒரு இன்ச் சதுரமாக வெட்டவும். குடைமிளகாய் - 1  ஒரு இன்ச் சதுரமாக வெட்டவும். பெரிய வெங்காயம் - 1 ஒரு இன்ச் சதுரமாக வெட்டவும். ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், சீனி - 1 சிட்டிகை, ஷெஷ்வான் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் ( இதிலேயே உப்பும் காரமும் இருக்கும். அதனால் மிளகாய், உப்பு தேவையில்லை ).

செய்முறை:- ஒரு பானில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கவும். அதில் சீனியோடு வெங்காயம், குடைமிளகாயை ஒரு நிமிடம் வதக்கி பனீரை சேர்த்து தீயை அதிகரிக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் ஷெஷ்வான் சாஸை ஊற்றி அடுப்பை அணைத்து நன்கு கலந்து பரிமாறவும். சுட சுட சூப்போடு பரிமாறினால் இதன் சுவையே அலாதிதான்.
 

திங்கள், 10 பிப்ரவரி, 2020

பனீர், ஆனியன் ஃப்ரிட்டர்ஸ்.

பனீர் ஆனியன் ஃப்ரிட்டர்ஸ் :-

தேவையானவை :- பனீர் - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் -1, பஜ்ஜி மிக்ஸ் அல்லது கடலை மாவு - அரை கப் ( கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை சோம்புப்பொடி, பெருங்காய்ப் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடியைக் கலக்கவும். ) உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பனீரை மெல்லிய விரல் நீள ஸ்லைஸாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பஜ்ஜி மிக்ஸ் உப்பு சேர்க்காமல் என்றால் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். ( கடலைமாவு  என்றால் உப்பு + மிளகாய்ப்பொடி+ சோம்புப்பொடி+பெருங்காயப்பொடி இவற்றைக் கரைக்கவும்). எண்ணெயைக் காயவைத்து பனீரையும் வெங்காயத்தையும் மாவில் தோய்த்துப் போட்டுப் பொரித்தெடுத்து தக்காளிசாஸுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...