1.பாதாம்
கீர்.
தேவையானவை :-
பாதாம்
பருப்பு - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 4
பால் – 1 லி
சீனி – ½ கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
மில்க் மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன்.
முந்திரிப் பருப்பு - 4
பால் – 1 லி
சீனி – ½ கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
மில்க் மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
:-
நன்கு சூடான தண்ணீரில் பாதாம் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும். ஜூஸரில் பாதாம்பருப்பையும் முந்திரிப்பருப்பையும் போட்டு ஒரு கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
நன்கு சூடான தண்ணீரில் பாதாம் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும். ஜூஸரில் பாதாம்பருப்பையும் முந்திரிப்பருப்பையும் போட்டு ஒரு கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
அரைத்தவற்றை
ஒரு காப்பர் பாட்டம் உள்ள சில்வர் பாத்திரத்தில் போட்டு ஜீனியைச் சேர்க்கவும். அதில்
மிச்ச பாலை ஊற்றி அடுப்பில் வைத்துக் கிளறவும். லேசாக சூடேறி வாசனை வரும் பக்குவத்தில்
இறக்கி குங்குமப்பூவையும் மில்க் மெயிடையும் சேர்க்கவும்.
ஃப்ரிஜ்ஜில்
வைத்துக் குளிர்வித்துப் பரிமாறவும்.
2.பழப் பாயாசம்:-
தேவையானவை :-
பழ டின் – 1 ( அல்லது)
சதுரத் துண்டுகளாக்கிய ஆப்பிள், பைன் ஆப்பிள், பச்சை,கறுப்பு திராக்ஷைகள்( விதையில்லாதது), செர்ரிப் பழம் – இந்தக் கலவை 1 கப்.
பால் – 1 லிட்டர்.
பாதாம் – 5
முந்திரி – 5
கஸ்டர்ட் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சீனி – ½ கப்
பழ எஸென்ஸ் – 3 சொட்டு
சாரைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
நெய் – 1 டீஸ்பூன்.


