எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஆடிமாத நிவேதனங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.GHEER & CHILLED RECIPES

1.பாதாம் கீர்.
தேவையானவை :-
பாதாம் பருப்பு - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 4
பால் – 1  லி
சீனி – ½  கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
மில்க் மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :-
நன்கு சூடான தண்ணீரில் பாதாம் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும். ஜூஸரில் பாதாம்பருப்பையும் முந்திரிப்பருப்பையும்  போட்டு ஒரு கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
அரைத்தவற்றை ஒரு காப்பர் பாட்டம் உள்ள சில்வர் பாத்திரத்தில் போட்டு ஜீனியைச் சேர்க்கவும். அதில் மிச்ச பாலை ஊற்றி அடுப்பில் வைத்துக் கிளறவும். லேசாக சூடேறி வாசனை வரும் பக்குவத்தில் இறக்கி குங்குமப்பூவையும் மில்க் மெயிடையும் சேர்க்கவும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்துக் குளிர்வித்துப் பரிமாறவும்.

2.பழப் பாயாசம்:-

தேவையானவை :-

பழ டின் – 1 ( அல்லது)
சதுரத் துண்டுகளாக்கிய ஆப்பிள், பைன் ஆப்பிள், பச்சை,கறுப்பு திராக்ஷைகள்( விதையில்லாதது), செர்ரிப் பழம் – இந்தக் கலவை 1 கப்.
பால் – 1 லிட்டர்.
பாதாம் – 5
முந்திரி – 5
கஸ்டர்ட் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சீனி –
½ கப்
பழ எஸென்ஸ் – 3 சொட்டு
சாரைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
நெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை:-
பாதாமையும் முந்திரியையும் வெந்நீரில் ஊறப்போடவும். பாதாமை உரித்து முந்திரியுடன் அரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். கஸ்டர்ட் பவுடரை வெதுவெதுப்பான பாலில் கரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். சீனியை சேர்க்கவும். நன்கு கலக்கி இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி ஆறவிடவும்.


ஆறியதும் அதில் பழ எஸென்ஸ், மற்றும் பழக் கலவையைச் சேர்க்கவும். சாரைப்பருப்பை நெய்யில் வறுத்துத் தூவி ஃப்ரிஜ்ஜில் 3 மணி நேரம் குளிரவைத்துப் பரிமாறவும்

3. ஃபிர்ணி :-

தேவையானவை :-

பால் –  4  கப்
பாசுமதி அரிசி -  ஒரு கைப்பிடி,
ஜீனி - 1 கப்,
பாதாம் - 6, சீவிய பிஸ்தா – 6  - ஊறவைத்துத் தோலுரித்து சீவி வைக்கவும்.
ஏலக்காய்  - 2
பன்னீர் – 1 டீஸ்பூன்.
சில்வர் ஃபாயில் பேப்பர் - 1,
பன்னீர் ரோஜா இதழ்கள் – சில.

செய்முறை:-
பாசுமதி அரிசியைக் கழுவித் தண்ணீரில் ஊற வைத்து, அரைக்கவும். பாலில் கரைத்து அடுப்பில் வைத்து சிறுதீயில் வேகவிடவும். அடிக்கடி கிளறவும். ஜீனி  சேர்த்துக் கரைந்ததும் சீவிய பாதாம் பிஸ்தாவைச் சேர்க்கவும். ஏலக்காயைப் பொடித்துப் போட்டு இறக்கவும். ஆறியவுடன் பன்னீர் சேர்த்துக் கலக்கி ரோஜா இதழ்களால் அலங்கரித்து சில்வர் ஃபாயிலால் கவர் செய்யவும். ஃப்ரிஜ்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.


குட்டி மண் பானைகளை நன்கு சுத்தம் செய்து அதில் ஃபிர்ணியை ஊற்றிக் குளிரவைத்தும் பரிமாறலாம்.

4. ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி :-
தேவையானவை :-
ஸ்ட்ராபெர்ரி – 8
வாழைப்பழம் – 1
தயிர் – 2 கப்
ஜீனி – 4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:-
பழங்களை சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும். இதில் தயிர், ஜீனி, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

5. ஃப்ரூட் கஸ்டர்டு
தேவையானவை :-
பால் – 4 கப்
சீனி –1/2 கப்
வனிலா பேஸ்ட் -  2 டீஸ்பூன்
கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்.

பழக்கலவை  - 1 கப் ( தோலுரித்து சுத்தம் செய்த ஆப்பிள், வாழைப்பழம். ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கிவி, சப்போட்டா )

செய்முறை :-
குளிர்ந்த பாலில் , ஜீனி, வனிலா பேஸ்டைக் கலக்கவும். அதை லேசாக சூடுபடுத்தி கஸ்டர்ட் பவுடரையும் கலக்கவும். நன்கு கலந்ததும் அடுப்பில் வைத்து நிதானமான தீயில் வேகவிடவும். பத்து நிமிடங்கள் ஒட்டாமல் வெந்த பிறகு இறக்கி ஆறவிடவும்.

ஆறிய கஸ்டர்டில் பழக்கலவையை சேர்த்துக் குளிர்வித்துப் பரிமாறவும்.

6. காரட் கீர் :-
தேவையானவை:-
காரட் – 2
பால் – 3 கப்
ஜீனி – ½ கப்
மில்க்மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 8
செய்முறை:-
காரட்டைத் தோலுரித்து சன்னமாகத் துருவி வைக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்தபின் அதில் காரட்டைப் போட்டு நிதானமான தீயில் வதக்கவும். லேசாக பச்சை வாசம் போனதும் கொதிக்கும் பாலை ஊற்றி வேகவிடவும். நன்கு மென்மையாக வெந்ததும் அதில் ஜீனி சேர்க்கவும். ஜீனி கரைந்ததும் மில்க்மெயிட் , முந்திரி சேர்த்துக் குளிர்வித்துப் பரிமாறவும்.
இன்னொரு வகையில் காரட்டைத் தோலுரித்து ஸ்லைசுகளாக நறுக்கு குக்கரில் வேக விடவும். ஆறியதும் அரைத்துக் கொதிக்கும் பாலில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து ஜீனி சேர்த்துக் கரைந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து இறக்கவும். முந்திரி தூவி குளிர்வித்துப் பரிமாறவும்.

7. குல்ஃபி:-
தேவையானவை
பால் – 5 கப்
ஜீனி- 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
பிஸ்தா , முந்திரி , பாதாம் – 1 கப் ( பொடியாக நறுக்கவும் )
குங்குமப்பூ – 1 சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
ஆல்மோண்ட் எசன்ஸ் - 1 ஸ்பூன்


செய்முறை
பாலை வத்தக் காய்ச்சவும். அதில் பால்பவுடரைக் கரைத்துச் சேர்த்து ஜீனி போடவும். ஜீனி கரையும்வரை அடுப்பில் வைக்கவும். இறக்கி ஆறவிட்டு அதில் ஏலப்பொடி தூவி ஆல்மோண்ட் எசன்ஸ் கலக்கவும். பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவைப் போட்டு நன்கு கலக்கு குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி மூடி ஃப்ரிஜ்ஜில் 8 மணி நேரம் உறைய விடவும். வெளியே எடுத்து குல்ஃபி மோல்டுகளின் மேல் தண்ணீர் ஊற்றினால் மூடியில் இருக்கும் குச்சியோடு குல்ஃபி ஐஸ் எளிதாக வெளியே எடுக்க முடியும். ஜில் ஜில்லென்று கொடுக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...