எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஓணம் ஸ்பெஷல் நிவேதனங்கள். ONAM RECIPES


இந்த ஓணம் ஸ்பெஷல் நிவேதனங்கள் செப்டம்பர் 1 - 15, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

1.பருப்புக்கறி:-
தேவையானவை :-
பாசிப்பருப்பு – 1 கப்
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1/3 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்


செய்முறை:-
பருப்பைக் கழுவி மஞ்சள் தூள் போட்டு தண்ணீரில் வேகப்போடவும். வெந்ததும் உப்பும் நெய்யும் சேர்த்து இறக்கவும்..

தேவையானவை :-
பாசிப்பருப்பு – 1 கப்
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1/3 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:-
பருப்பைக் கழுவி மஞ்சள் தூள் போட்டு தண்ணீரில் வேகப்போடவும். வெந்ததும் உப்பும் நெய்யும் சேர்த்து இறக்கவும்..

2.இஞ்சித்தயிர்:-
தேவையானவை :-
இஞ்சி – பொடியாக அரிந்தது – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – ¼ டீஸ்பூன்

செய்முறை:-
அனைத்தையும் கலந்து உபயோகிக்கவும்.

3.கூட்டுக்கறி:-

தேவையானவை:-
காரட் வாழைக்காய், சேனைக்கிழங்கு, பரங்கிக்காய் காராமணி – சிறுதுண்டுகளாக்கியது ஒரு கப்
கடலைப்பருப்பு – 1 கப்
மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்
மிளகுத்தூள் – ¼ டீஸ்ஊன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தேங்காய் – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
வர மிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
உப்பு – ½ டீஸ்பூன்

செய்முறை:-
கடலைப்பருப்பை வேகப்போடவும். பாதி வெந்ததும் காய்கறிகளைத் தோல்சீவி சிறுதுண்டுகளாக்கி சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்க்கவும். உப்பு போடவும். தேங்காயைத் துருவி சீரகத்துடன் சேர்த்து அரைத்து ஊற்றவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துக் கூட்டில் போட்டுக் கலந்து உபயோகப்படுத்தவும்.

4. கடலக் கறி:-
தேவையானவை:-
கறுப்பு கொண்டைக்கடலை – 1 கப்
வெங்காயம் – 1
வெள்ளை வெங்காயம் – 4
தேங்காய் – பல் பல்லாக நறுக்கியது – 1 டேபிள் ஸ்பூன்.
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்.
கடுகு – ¼ டீஸ்பூன்
வரமிளகாய் – 2
உப்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு

அரைக்க:-
துருவிய தேங்காய் -  1 கப்
வெள்ளை வெங்காயம் – 2
சோம்பு – ¼ டீஸ்பூன்,
மிளகு – ½ டீஸ்பூன்.
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பட்டை – 1
பூ – 1

செய்முறை:-
கறுப்புக் கொண்டைக்கடலையை முதல்நாளே ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் மஞ்சள்தூள் உப்புடன் வேகப்போடவும். சிறிது எண்ணெயில் சோம்பு, மிளகு, ஏலக்காய், கிராம்பு பட்டை, பூ , வெள்ளை வெங்காயம் ஆகியவற்றை வதக்கி தேங்காயையும் சிவப்பாகும்வரை வறுத்து அரைக்கவும்.

தேங்காய் எண்ணெயைக் ஒரு பானில் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் இரண்டாகக்கிள்ளிய வரமிளகாய் போட்டு கருவேப்பிலை வெங்காயம் பச்சைமிளகாய் பல்லுப்பல்லாக் நறுக்கிய தேங்காய் போட்டு வறுக்கவும். இதில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் போட்டுக் கிளறி அரைத்த கலவையை ஊற்றவும். கலவை கொதிவரும்போது வெந்த கடலையைப் போட்டு இன்னும் சிறிது உப்பு சேர்க்கவும். நன்கு சேர்ந்து வெந்ததும் இறக்கவும்.  

5.பைனாப்பிள்/பப்பாளி பச்சடி:-
தேவையானவை:-
பைனாப்பிள் – தோல் சீவி சதுரத்துண்டுகளாக்கியது – 2 கப் அல்லது பப்பாளி – 2 கப்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – 1/3 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
வரமிளகாய் – 4
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்.
கருவேப்பிலை – இணுக்கு
பொடித்த கடுகு _ 1 டீஸ்பூன். 

செய்முறை:-
பைனாப்பிளை அல்லது பப்பாளியை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அரைக் கப் தண்ணீரில் வேகப்போடவும். தேங்காய்த் துருவலுடன் . ஒரு வரமிளகாய் சேர்த்து அரைக்கவும்.

ஒரு பானில் கடுகு தாளித்து மூன்று வரமிளகாய்களைக் கிள்ளிப் போடவும். அதில் கருவேப்பிலை அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கி பைனாப்பிள் அல்லது பப்பாளியை சேர்க்கவும். பொடித்த கடுகைச் சேர்த்து இறக்கவும்.

6.பரங்கிக்காய் எரிசேரி:-
தேவையானவை:-
பரங்கிக்காய் – 1 துண்டு
தட்டைப்பயிறு – 1 கப் வேகவைத்தது
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – ½ டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம். – சிறிது
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:-
பரங்கிக்காயைத் தோல்சீவி வேகப்போடவும். பாதி வெந்ததும் தட்டைப்பயறைச் சேர்த்து மிளகுத்தூள் போடவும். ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காயுடன் சீரகம் சேர்த்து அரைத்து வெந்த காயில் போட்டு வேகவிடவும். உப்பு சேர்க்கவும். மிச்சதேங்காத்துருவலையும் அரைத்து தேங்காய் எண்ணெயில் அரக்காக வறுத்து வைக்கவும்.
பானில் நெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். அதில் மிச்ச தேங்காய் எண்ணெய், வெந்த காய்கறிக்கலவை,அரக்காய் வதக்கிய தேங்காய் பேஸ்ட் போட்டுக் கலந்து இறக்கவும். 

7.மாம்பழப் புளிசேரி:-
தேவையானவை :-
சின்ன மாம்பழங்கள் – 4
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - 1/2 ஸ்பூன் தேங்காய்  - அரை மூடி
சின்னவெங்காய்ம் – 6
இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 இணுக்கு.
உப்பு – ½ டீஸ்பூன்.
தேங்காய் எண்ணை – 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
தயிர் -  1 கப்


செய்முறை:-
முழுதாக மாம்பழத்தைத் தோலுரித்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவிடவும்.தேங்காய் சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், பச்சைமிளகாயை அரைத்து ஊற்றவும். வெந்ததும் உப்பு, தயிர் சேர்த்து இறக்கவும். தேங்காய் எண்ணையில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

8.சர்க்கர உப்பேரி.:-
தேவையானவை –
நேந்திரம் வாழைக்காய் – 4
உப்பு – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
ஒரு ஸ்பூன் உப்புக் கலந்த தண்ணீர் – 1 கப்
வெல்லம் – 1 ½ கப்
சுக்குப் பொடி- 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
பொடித்த சீனி – 1 டேபிஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
நேந்திரம் வாழைக்காய்களைத் தோல்சீவி மஞ்சள்பொடி உப்பு சேர்ந்த்த நீரில் ஊறப்போடவும். சிறிது நேரம் கழித்துப் பெரிய துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் பொறிக்கவும். பாதி பொறிக்கும்போதே உப்புக்கலந்த தண்ணீரைத் தெளித்து மூடியால் மூடவும். நன்கு கிரிஸ்பாக வெந்ததும் எடுத்து வெல்லத்தை முத்துப்பாகு வைத்து அதில் போடவும். சுக்குப்பொடி, ஏலத்தூள், சீரகத்தூள் போட்டுக் கலக்கி லேசாக சூடு ஆறியதும் சீனியைத் தூவிப் பிரட்டி வைக்கவும். 



9. பலாப்பிஞ்சுத் தோரன்.
தேவையானவை :-
பலாப்பிஞ்சு – 1
மஞ்சள்பொடி – 1 சிட்டிகை
உப்பு – ½ டீஸ்பூன்

அரைக்க:-
தேங்காய் – 1 மூடி
வரமிளகாய் – 2
பூண்டு – 2 பல்
சீரகம் – ½ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை.

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுந்து – ½ டீஸ்பூன்
வரமிளகாய் – 2

கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:-
பலாப்பிஞ்சை மஞ்சள்பொடி உப்போடு வேகவைத்து நீரை வடித்து மிக்ஸியில் போட்டு லேசாக உதிர்த்துக்கொள்ளவும்.அரைக்கக் கொடுத்துள்ளவற்றை பெருபெருவென்று தண்ணீர் விடாமல் அரைக்கவும். எண்ணெயைக்காயவைத்துக் கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயைக்கிள்ளிப்போடவும். கருவேப்பிலை சேர்த்து பொடித்த பலாப்பிஞ்சைப்போட்டு அரைத்த தேங்காயையும் போட்டு கிளறி உடன் இறக்கி ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணய் ஊற்றவும்.

10 காளன்:-
சேனைக்கிழங்கு – 1 துண்டு
வாழைக்காய் – 1
பச்சைமிளகாய் – 3
தயிர் – 2 கப்
துருவிய தேங்காய் – ஒரு கப்
சீரகம் – ½ டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் – ½ டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கடுகு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை –  1 இணுக்கு.

செய்முறை:-
வாழைக்காயையும் சேனையையும் தோலுரித்துத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சீரகத்தையும் தேங்காயையும் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அரை கப் தண்ணீரில் மிளகுத்தூளைப்போட்டு வடிகட்டி அந்தத்தண்ணீரில் காய்களைப் வேகப்போடவும். மஞ்சள்தூள் உப்பு சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும் ஒரு ஸ்பூன் நெய் , தயிர் சேர்த்துத் தீயை சிம்மில் வைக்கவும். தயிர் கொதிக்க ஆரம்பிக்கும்போது தேங்காய் அரைத்த கலவையைப் போடவும். வெந்தயப் பொடியைப் போட்டுக் கலக்கி கொதித்தபின் இறக்கி கடுகு இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.



11.  ஓலன்:-
தேவையானவை:-
வெள்ளைப் பூசணிக்கீத்து – 1
தட்டைப்பயிறு. – அரை கப்
தேங்காய் – 1 ( கால் டம்ளர் திக் பாலும் ஒரு டம்ளர் தண்ணிப்பாலும் எடுத்துக்கொள்ளவும்.)
பச்சைமிளகாய் – 6
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்


செய்முறை: பூசணியைத் தோல்சீவித் துண்டுகளாக்கி இரண்டாம் பாலில், பச்சை மிளகாய் சேர்த்து வேகப்போடவும்.தட்டைப்பயிறைத் தனியாக நன்கு குக்கரில் வேகவைத்துப் போடவும். வெந்தபயறு, உப்பை பூசணிக்காயுடன் சேர்க்கவும். முதல் பால் விட்டு ஒரு கொதி வந்ததும் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
12. முருங்கைக்காய் மிளகூட்டல்:-
தேவையானவை.:-
முருங்கைக்காய் – 5
துவரம்பருப்பு – ½ கப்

தேங்காய் – 1 மூடி
மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம்  - ½ டீஸ்பூன்
வரமிளகாய் – 4
கடுகு – ½ டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்.

செய்முறை::-
முருங்கைக்காயை வெட்டி வேகவைத்து சதையை வழித்து வைத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை வேகவைத்து முருங்கைச் சதையைச் சேர்த்துவைக்கவும். தேங்காய் வரமிளகாய், மிளகு சீரகம் இவற்றை நன்கு அரைத்து பருப்பு முருங்கைக்கலவையில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கு கடுகு தாளிக்கவும்.

13. இஞ்சிப்புளி:-
தேவையாவனை:-
இஞ்சி – 200 கி
பச்சை மிளகாய் – 50 கி

புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 கிராம்
வெல்லம் – 50 கி

கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:-
இஞ்சியைத் தோல்சீவிக் கழுவிப் பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயையும் நான்காக நறுக்கவும். உப்புப்புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். பானில் நல்லெண்ணெய் ஊத்தி கடுகு போட்டுப் பொறிந்ததும் கருவேப்பிலை, இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள் சேர்த்து கரைத்த உப்புப்புளியை ஊற்றவும். கொதித்து சுண்டும்போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

14. கேரள அவியல்:-
தேவையானவை:-
சேனைக்கிழங்கு – 1 துண்டு
வெள்ளரிக்காய் 1
பூசணிக்காய் – ஒரு கீத்து.
பாகற்காய் – 1
காரட்- 1
அவரைக்காய் – 6
முருங்கைக்காய் – 1
வாழைக்காய் – 1
மாங்காய் – 1
மஞ்சள்தூள்  - 1 சிட்டிகை.
உப்பு – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 மூடி.
பச்சைமிளகாய் – 4
சீரகம்- 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கெட்டித்தயிர் – ½ கப்
கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- எல்லாக் காய்கறிகளையும் தோலுரித்துக்கழுவி இரண்டு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சேனைக்கிழங்கைத் தனியாக வேகவைத்து நீரை வடிக்கவும். ஒரு பானில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் காயவைத்துக் காய்களை நிதானமான தீயில் வதக்கவும். கடைசியாக மாங்காய் வாழைக்காய் போட்டு மூடி போட்டு சிம்மில் வேகவைக்கவும். கால் கப் தண்ணீர் தேவையானால் ஊற்றலாம். பத்து நிமிடம் கழித்து வெந்ததும். தேங்காய், பச்சைமிளகாய் சீரகத்தை அரைத்து ஊற்றவும். உப்பு சேர்த்து நுரைத்து வரும்போது தயிரைக் கடைந்து ஊற்றி தேங்காயெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி கருவேப்பிலை போட்டு இறக்கி மூடிவைக்கவும்.

15. பால் பாயாசம்-
தேவையானவை:-
பால் – 3 லிட்டர்
கேரள சிவப்பரிசி – ¾ கப்
சீனி- 750 கி

செய்முறை:-
அரிசியைக் களைந்து பாலில் வேகப்போடவும். வெந்து பால் சுண்டி வரும்போது ஜீனியைச் சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும்.இதே போல கைக்குத்தல் சிவப்பு அவல் போட்டும் செய்யலாம்.

16. பாலாடைப் பிரதமன்:-
தேவையானவை:-
ரெடிமேட் அடை – ஒரு பாக்கெட்
பால் – 1 லி
மில்க் மெய்ட் – 200 கி

சீனி – 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை
குங்குமப்பூ – 1 சிட்டிகை
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 15
திராக்ஷை- 15.


செய்முறை:-
அடையை முதலில் கொதிக்கும் நீரில் போட்டுக் கழுவிப் பின்பு வேகவைக்கவும். பாலைக் காய்ச்சி அதில் அடையை சேர்த்து வற்றவிடவும். சுண்டி வரும்போது மில்க மெயிடையும் சீனியையும் சேர்க்கவும். இறக்கி ஏலப்பொடி, குங்குமப்பூ ( சூடான பாலில் கரைத்து ஊற்றவும். ) போட்டு நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும்.

17. நேந்திரம் பழப் பிரதமன்:-
தேவையானவை:-
நேந்திரம் பழம் – 1
தேங்காய் முற்றியது – 1
வெல்லம் – 4 அச்சு
ஏலக்காய் – 2
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 15.

செய்முறை:-
நேந்திரம்பழத்தைத் தோலுரித்து வேகவைத்து மசிக்கவும். தேங்காயைத் திருகி கெட்டிப்பால் அரை கப்பும் தண்ணிப்பால் 1 ½ கப்பும் எடுக்கவும். வெல்லத்தைப் பொடித்துப் பாகு காய்ச்சி பழக்கூழையும் சேர்த்துக் காய்ச்சவும். நன்கு கிளற் இரண்டாம் பாலை ஊற்றி இறக்கி வைத்து முதல் பாலையும் சேர்க்கவும். நெய்யில் முந்திரியைப் பொறித்துப் போடவும்.

18. சக்கைப் பிரதமன்:-
தேவையானவை:-
பலாச்சுளை – 20
பாசிப்பருப்பு – 50 கி
தேங்காய் – 1
வெல்லம் – 4 அச்சு
ஏலக்காய் – 2
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 15
பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
பாசிப்பருப்பை வேகப்போடவும். பலாச்சுளையை கொட்டை நீக்கி நறுக்கு குக்கரில் வேகவைத்து ஆறவைத்து மசிக்கவும். தேங்காயில் இரண்டு பால் எடுக்கவும். இரண்டாம் பாலை பருப்பில் ஊற்றி வெல்லத்தைக் கரைய வைக்கவும். அதில் அரைத்த பலாச்சுளையைப் போட்டுக் கொதித்ததும் இறக்கி நெய்யில் முந்திரி தேங்காய்ப்பல்லைப் பொறித்துப் போட்டு ஏலக்காய்ப் பொடி தூவிப் பரிமாறவும். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...