எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 நவம்பர், 2010

ONION TOMATO SALAD.. வெங்காயம் தக்காளி சாலட்..


ONION TOMATO SALAD.:-
NEEDED :-
ONION - 1 NO
TOMATO - 1 NO
GREEN CHILLY - 1 OR 2
TURMERIC POWDER - 1 PINCH
SALT - 1/8 TSP.
METHOD :- PEEL AND CHOP ONION , CHOP TOMATO AND GREEN CHILLY. ADD TURMERIC POWDER AND SALT . STIRR WELL. MARINATE FOR 10 MINUTES AND SERVE IT WITH CHAPPAHIS OR WITH FRIED RICE OR FRIED PAPPADS .
வெங்காயம் தக்காளி சாலட் :-
தேவையானவை :-
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
செய்முறை :-
வெங்காயத்தை தோலுரித்து சன்னமாக வெட்டவும். தக்காளியையும் பச்சை மிளகாயையும் சன்னமாக வெட்டவும்.. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்கு குலுக்கவும். 10 நிமிடம் ஊறவைக்கவும். சப்பாத்தி அல்லது ஃப்ரைட் ரைஸ். அல்லது பொரித்த அப்பளம் அல்லது அப்பளப் பூவுடன் பரிமாறவும்..

புதன், 17 நவம்பர், 2010

BITTER GOURD CHIPS.. பாகற்காய் சிப்ஸ்..

BITTER GOURD CHIPS :- NEEDED :- BITTER GOURD - 250 GMS CHILLI POWDER - 1/2 TSP SALT - 1/2 TSP OIL - 100 ML FOR FRYING METHOD :- WASH AND SLICE THE BITTER GOURD INTO THIN ROUNDS. ADD CHILLI POWDER AND SALT .. MIX WELL AND MARINATE FOR 5 MINUTES. DEEP FRY IN OIL AND SERVE IT WITH SAMBAR RICE AND CURD RICE.. 


 பாகற்காய் பொரியல் :- பாகற்காய் - 250 கிராம் மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 100 மிலி பொறிக்க.. செய்முறை :- பாகற்காய்களைக் கழுவி மிக மெல்லிய வட்டங்களாக வெட்டவும். உப்பு ., மிளகாய்ப் பொடியைப் போட்டு நன்கு குலுக்கவும்.. 5 நிமிடம் ஊற விடவும். எண்ணெயைக் காயவைத்து நன்கு ப்ரவுன் ஆகும்வரை பொறித்தெடுக்கவும். சாம்பார் சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

திங்கள், 15 நவம்பர், 2010

BUTTER FISH GRAVY.. விரால் மீன் குழம்பு..

BUTTER FISH GRAVY :-
NEEDED:-
BUTTER FISH - 250 GRAMS
SMALL ONION - 10 NOS
GARLIC - 8 NOS
TOMATO - 1
CURRY LEAVES - 1 ARK
TURMARIND - 1 LEMON SIZE BALL
SALT - 2 TSP.
CHILLI POWDER - 1 /2 TBL SPN
CORRIANER POWDER - 1 TBLSPN
TURMERIC POWDER - 1/4 TSP
SOMPH - 1 TSP
FENUGREEK - 1/2 TSP
OIL - 20 ML


METHOD :-
WASH CLEAN AND CUT THE BUTTER FISH INTO SLICES. PEEL AND CUT THE SMALL ONION., GARLIC AND TOMATOES. HEAT OIL IN A PAN ADD SOMPH AND FENUGREEK. WHEN IT SPLUTTERS ADD ONION., GARLIC AND TOMATOES., CURRY LEAVES. TAKE THE TURMARIND PULP IN 2 TUMBLERS OF WATER., ADD SALT. ADD THIS PULP IN THA PAN WITH TURMERIC POWDER., CHILLI POWDER AND CORRIANDER POWDER. BRING TO BOIL FOR SOME TIME. WHEN IT BECOMES LITTLE THICK ADD SLICED FISHES IN THE GRAVY.. COOK FOR 5 MIN AND SERVE IT WITH PLAIN RICE.


விரால் மீன் குழம்பு :-

தேவையானவை :-
விரால் மீன் - 250 கிராம்.
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8
தக்காளி - 1
கருவேப்பிலை- 1 இணுக்கு
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 20 மிலி.

செய்முறை :-
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகள் செய்யவும். வெங்காயம் ., பூண்டு தக்காளியை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காய வைத்து சோம்பு ., வெந்தயம் தாளிக்கவும்.. அது பொரிந்ததும் வெங்காயம்., பூண்டு., தக்காளி, கருவேப்பிலையைச் சேர்க்கவும். புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்துச் சாறெடுத்துக் கொள்ளவும். உப்பை இதனுடன் சேர்க்கவும். பானில் புளிக்கரைசல்., மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சப்பொடியை சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.. சிறிது கெட்டியானதும் மீன் துண்டுகளைச் சேர்க்கவும். 5 நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

சனி, 13 நவம்பர், 2010

KING FISH FRY.. வஞ்சிரம் மீன் வறுவல்..

KING FISH FRY:- NEEDED:- KING FISH - HALF KILO SLICED AND WELL WASHED RED CHILLI POWDER - 1 TABLE SPN TURMERIC POWDER - 1 TSP SALT - 2 TSP OIL - FOR FRYING. METHOD :- MIX RED CHILLI POWDER., TURMERIC POWDER., SALT IN A PLATE AND SPREAD IT AROUND THE FISH WELL. FRY IN A TAWA WITH LOW OIL AND LOW FLAME.. SERVE IT WITH SAMBAR RICE OR CURD RICE . 



 வஞ்சிரம் மீன் வறுவல் :- தேவையானவை :- வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ., ஸ்லைசாக வெட்டி நன்கு கழுவவும். மிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - 2 டீஸ்பூன் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.. செய்முறை :- மிளகாய்ப்பொடி., மஞ்சள் பொடி., உப்பை ஒரு தட்டில் நன்கு கலக்கவும். மீனின் எல்லாப் பக்கங்களிலும் படுமாறு நன்கு பிரட்டவும். பானில் சிறிதளவு எண்ணெயில் சின்ன தீயில் நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுத்து சாம்பார் சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்..

செவ்வாய், 9 நவம்பர், 2010

KALKANDU VADAI.. கல்கண்டு வடை..

KALKANDU VADAI :-
NEEDED:-
URAD DHAL - 1 CUP
KALKANDU ( SUGAR BAR.. CRUSHED ) OR SUGAR - 1 CUP
SALT - 1 PINCH.
OIL - FOR FRYING.

METHOD :-
WASH AND SOAK URAD DHAL FOR 2 HOURS.
DRAIN WATER AND GRIND WELL .. ADD KALKANDU OR SUGAR AND GRIND IT INTO A FINE SMOOTH FLUFFY DOUGH.
HEAT OIL IN A PAN MAKE VADAIS AND FRY WELL. IT WILL BE GOOD FOR 3 DAYS.
ITS A CHETTINAD SPECIAL SWEET ITEM AND PREPARED AND SERVED MARRIAGES AND IN DEEPAVALAI AND IN PILLAIYAR NONBU .

கல்கண்டு வடை :-
உளுந்து - 1 கப்
கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க..

செய்முறை :-
உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. திருமணங்கள்., தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...