எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

பச்சை மிளகாய் போட்ட இட்லி சாம்பார்

பச்சை மிளகாய் போட்ட இட்லி சாம்பார்.



தேவையானவை.:-

முருங்கைக்காய்  - 1
கத்திரிக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1 ( சின்னம்) 
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 8
வேகவைத்த துவரம் பருப்பு -1 கப்
புளி -  2 சுளை. 
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு


செய்முறை:-


முருங்கைக்காயை 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.  ப்ரஷர் பானில் வெந்த பருப்புடன் இவற்றைப் போட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, இரண்டாக வகிர்ந்த பச்சைமிளகாயைச் சேர்த்து ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். . ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடாக இட்லியுடன்  பரிமாறவும்.
 
 

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

வெண்டைக்காய் சூப்

வெண்டைக்காய் சூப்:-


தேவையானவை:-
வெண்டைக்காய் முற்றியது  - 10 
வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கவும்
தக்காளி - 1 துண்டுகளாக்கவும்.
பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் /நெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/3 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
இலை - இன்ச்
கல்பாசிப்பூ - 1 இன்ச்
ஏலக்காய் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு.
கொத்துமல்லி தழை - 1 டீஸ்பூன்.
உப்பு - 1 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

வெண்டைக்காய்களை  இரண்டு இன்ச் துண்டுகளாக வெட்டவும். ஒரு பானில் எண்ணெய்/ நெய் ஊற்றி உளுந்து, சோம்பு, சீரகம்., மிளகு, கல்பாசிப்பூ., பட்டை., இலை., ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி., கருவேப்பிலை., பச்சை மிளகாய், வெண்டைக்காய் போட்டு நன்கு வதக்கவும். துவரம்பருப்பை நன்கு மசித்து 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பானில் ஊற்றவும். கொதி வந்ததும் சிம்மில் மூடி போட்டு 7 நிமிடம் வேக விடவும். பால் ஊற்றி கொத்துமல்லித்தழை சேர்த்து வறுத்த அரிசி வத்தல்களுடன் பரிமாறவும்.

  

வியாழன், 21 ஜனவரி, 2021

ஃப்ரூட் சாட்

ஃப்ரூட் சாட் :- 


தேவையானவை:- வாழைப்பழம் – 1,  பப்பாளி – 1துண்டு, தர்ப்பூசணி – 1 துண்டு, மஞ்சள் கிர்ணி – 1துண்டு. சாட் மசாலா.

செய்முறை:- பழங்களைத் தோல் சீவிக் கழுவிப் பெரிய சதுரத் துண்டுகளாக்கவும். இதை சர்விங் கப்பில் போட்டு சாட் மசாலா தூவி ஸ்டிக் குத்திக் கொடுக்கவும்.
  

செவ்வாய், 12 ஜனவரி, 2021

மசாலா பொரி

மசாலா பொரி :-


தேவையானவை :- பொரி - 1கப், காரட் துருவியது - 1 டேபிள் ஸ்பூன் , பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - அரை டேபிள் ஸ்பூன், சாட் மசாலா - 1 சிட்டிகை, கொத்துமல்லித்தழை - சிறிது.

செய்முறை:- அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு நன்கு கலந்து கொடுக்கவும். பொரியில் உப்பு இருப்பதால் உப்பு போட வேண்டாம். 
  

திங்கள், 11 ஜனவரி, 2021

பீட்ரூட் கட்லெட்

பீட்ரூட் கட்லெட்


தேவையானவை:- பீட்ரூட் - 1, ப்ரெட் - 2 ஸ்லைஸ், அவித்த உருளைக்கிழங்கு - 1 சின்னம், பெரிய வெங்காயம் - 1 சின்னம், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சோம்புத்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலா - 1 சிட்டிகை, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் -1, முந்திரி 10, நெய் + எண்ணெய் - 50 கிராம்.

செய்முறை:- பீட்ரூட்டைத் துருவவும்.பச்சைமிளகாய்,  பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். ஒரு பவுலில் ஓரங்கள் நீக்கிய ப்ரெட், அவித்த உருளைக்கிழங்கு, துருவிய பீட்ரூட், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மிளகாய், சோம்புத்தூள் போட்டு வெண்ணெயைக் கலந்து நன்கு பிசையவும். இதய வடிவில் தட்டி முந்திரியைப் பதித்து தட்டையான பேனில் மூன்று நான்காகப் போட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து மயோனிஸோடு பரிமாறவும். 

  
Related Posts Plugin for WordPress, Blogger...