எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 டிசம்பர், 2012

AUBERGINE PIRATTAL. கத்திரிக்காய் பிரட்டல்


AUBERGINE PIRATTAL:-

NEEDED:-
AUBERGINE -250 GMS
BIG ONION - 1 NO. FINELY CHOPPED
TOMATO- 1 NO FINELY CHOPPED
GARLIC - 6 PODS
CURRY LEAVES - 1ARK
OIL - 1 TBLSPN
MUSTARD - 1TSP
ORID DHALL - 1 TSP
SOMPH - 1/2 TSP
SALT - 1 TSP

TO GRIND:-
REDCHILLIES - 8 NOS
SOMPH - 1TSP
JEERA - 1/2 TSP
PEPPER - 1/4 TSP
COCONUT - 2 INCH PIECE
SMALL ONION - 2 NO
GARLIC - 1NO.

METHOD:-
GRIND ALL THE INGREDIENTS WELL. WASH AND CUT AUBERGINES INTO 8 PIECES. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. THEN ADD SOMPH, CURRY LEAVES, CHOPPED ONION, TOMATO, GARLIC & AUBERGINE. SAUTE FOR 5 MINUTES. ADD THE MASALA & SALT. SAUTE WELL. ADD LITTLE WATER. COOK TILL THE AUBERGINES ARE TENDER. SERVE HOT WITH CURD RICE OR CHAPPATHIS.

கத்திரிக்காய் பிரட்டல்:-
தேவையானவை:-
கத்திரிக்காய் - 250 கி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்.
தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்.
பூண்டு - 6 பல்
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு -  1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

அரைக்க:-
வரமிளகாய் - 8
சோம்பு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் துண்டு
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1 பல்

செய்முறை:-
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அரைக்கவும். கத்திரிக்காய்களைக் கழுவி 8 துண்டுகளாக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து போடவும். சிவந்தவுடன் சோம்பு, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு, கத்திரிக்காய் போட்டு 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும். அதில் உப்பு போட்டு அரைத்த மசாலாவைப் போட்டுத் திறக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து  வேகவிடவும். மசாலா ஒன்று சேர்ந்து கத்திரிக்காய் வெந்ததும்  சூடாக தயிர்சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

புதன், 14 நவம்பர், 2012

RAGI DOSA.ராகி தோசை ( கேப்பை

RAGI DOSA.ராகி தோசை ( கேப்பை)

RAGI DOSA.:-
NEEDED:-
RAGI - 1 CUP
RICE - 1/4 CUP
ORID DHAL - 1/4 CUP
SALT - 1/2TSP

CHOPPED ONION - 1/4 CUP
CHOPPED GREEN CHILLIE - 1 TSP
JEERA - 1/3 TSP
ASAFOETIDA - 1 PINCH
OIL -  5 TSP

METHOD:-

WASH & SOAK RAGI, RICE AND ORID DHAL SEPERATELY FOR 2 HOURS. GRIND WELL WITH SALT. TO THE BATTER ADD CHOPPED ONION, GREEN CHILLIE,JEERA AND ASAFOETIDA. HEAT THE DOSA PAN AND PREPARE DOSAS.. SERVE HOT WITH RED CHILLIE CHUTNEY.

ராகி தோசை:-
தேவையானவை:-
ராகி ( கேப்பை) - 1 கப்
அரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்

பொடியாக அரிந்த வெங்காயம் - 1/4 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.
எண்ணெய் - 5 டீஸ்பூன்

செய்முறை:-

ராகி, அரிசி, உளுந்து மூன்றையும் கழுவி தனியாக ஊறவைக்கவும். ஒன்றாக சேர்த்து உப்பு சேர்த்து ஆட்டவும்.மாவில் வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், பெருங்காயப்பொடி கலந்து தோசைகளாக ஊற்றவும். சூடாக மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

வியாழன், 1 நவம்பர், 2012

EGG TOMATO BHURJI. முட்டை தக்காளி புர்ஜி

EGG TOMATO BHURJI. முட்டை தக்காளி புர்ஜி

EGG TOMATO BHURJI:-


NEEDED:-
EGGS - 2 NOS
TOMATO - 1 NO CHOPPED
BIG ONION - 1 NO CHOPPED
GREEN CHILLIE - 1 NO CHOPPED
RED CHILLI POWDER - 1/2 TSP
PEPPER POWDER - 1/2 TSP
SALT - 1/4 TSP
OIL - 2 TSP

PREPARATION:-
HEAT OIL IN A PAN. ADD GREEN CHILLIE, BIG ONION,TOMATO. SAUTE FOR A MINUTE. ADD SALT, PEPPER POWDER, RED CHILLI POWDER. THEN ADD THE EGGS AND STIRR WELL. SERVE HOT WITH CHAPPATHI OR VARIETY RICES.

முட்டை தக்காளி புர்ஜி:-

தேவையானவை:-
முட்டை - 2
தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கவும்.
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பச்சை மிளகாய் , பெரிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும்.  ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அதில் உப்பு, மிளகுப் பொடி, சிவப்பு மிளகாய்ப் பொடி சேர்க்கவும். பின்  முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். சூடாக சப்பாத்தி அல்லது கலவை சாதத்தோடு பரிமாறவும்.

PLANTAIN BAJJI.வாழைக்காய் பஜ்ஜி

PLANTAIN BAJJI.வாழைக்காய் பஜ்ஜி

PLANTAIL BAJJI:-
NEEDED:-
PLANTAIN - 1 NO
CHANNA DHAL FLOUR -1 CUP
MAIDA - 1 TSP
RAW RICE FLOUR - 1 TSP
RED CHILLI POWDER - 1/ TSP
ASAFOETIDA - 1 PINCH
RED FOOD COLOUR -1 PINCH
SALT - 1/3 TSP

OR INSTEAD OF ALL THIS
MTR BAJJI BONDA MIX - 1 CUP
WATER - NEEDED
OIL - FOR FRYING

PREPARATION:-
PUT ALL THE INGREDIENTS IN A BOWL OR MTR
BAJJI BONDA MIX.ADD ENOUGH WATER TO MAKE
A SMOOTH BATTER. STIRR WELL UNTIL THERE IS
NO LUMPS. CUT THE TWO ENDS OF THE PLANTAIN
AND SLICE IT FINELY INTO AN OBLONGATE SIZE.
DIP IT IN THE BATTER AND FRY IT IN HOT OIL.
SERVE HOT WITH COCONUT CHUTNEY OR KOTHTHUMALLI
CHUTNEY.

வாழைக்காய் பஜ்ஜி:-
தேவையானவை:-
வாழைக்காய் - 1
கடலைமாவு - 1 கப்
மைதா - 1 டீஸ்பூன்
பச்சரிசி மாவு - 1 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை
உப்பு - 1/3 டீஸ்பூன்

அல்லது இவை எல்லாவற்றுக்கும் பதிலாக
எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு,

செய்முறை:-
ஒரு பவுலில் எல்லாவற்றையும் போட்டுத் தேவையான தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். வாழைக்காயைத் தோல் சீவி இரு முனைகளிலும் ஒரு இன்ச் வெட்டிப் போட்டு விட்டு மிச்சத்தை நீள் செவ்வகங்களாக ஸ்லைஸ் செய்யவும். பஜ்ஜி மாவில் தோய்த்து காய்த்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாக தேங்காய் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னியுடன் பரிமாறவும்.

சனி, 27 அக்டோபர், 2012

GARLIC PICKLE.வெள்ளைப்பூண்டு ஊறுகாய்

GARLIC PICKLE.வெள்ளைப்பூண்டு ஊறுகாய்.

GARLIC PICKLE.:_
NEEDED:-
PEELED GALRIC - 2 CUPS
LEMON JUICE - 1 CUP
TILL OIL - 1 CUP
MUSTARD - 1 TSP
RED CHILLI POWDER - 1/2 CUP
SALT - 1/4 CUP
DHANIYA - 1/3 CUP
JEERA - 1/3 CUP
FENUGREEK - 1/8 CUP
JAGGERY - 1 NO.

METHOD:-
FRY THE DHANIYA, JEERA, FENUGREEK SEPERATELY IN A DRIED PAN WITHOUT OIL. POWDER THEM . HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD GARLIC. KEEP STIRRING IN A MEDIUM FIRE. AFTER HALF COOKING ADD THE CHILLI POWDER, DHANIYA POWDER, JEERA POWDER, FENUGREEK POWDER AND SALT. FRY FOR A MINUTE AND ADD THE LEMON JUICE. COOK FOR 2 MINUTES AND ADD THE CRUSHED JAGGERY. REMOVE FROM FIRE . KEEP ASIDE FOR COOLING. AFTER COOLING FILLED IT IN AIR TIGHT CONTAINERS AND KEEP REFRIDGERATED. TAKE SMALL  QUANTITIES WHEN NEEDED. SERVE IT WITH CURD RICE OR CHAPPATHIS.

வெள்ளைப்பூண்டு ஊறுகாய்.:-
தேவையானவை:-
தோலுரித்த பூண்டு - 2 கப்
எலுமிச்சை ரசம் - 1 கப்
எள் எண்ணெய் - 1 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1/2 கப்
உப்பு - 1/4 கப்
வர மல்லி - 1/3 கப்
ஜீரகம் - 1/3 கப்
வெந்தயம் - 1/8 கப்
வெல்லம் - 1 அச்சு.

செய்முறை:-
வர மல்லி, ஜீரகம், வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்ததும் பூண்டைப்
போட்டு வதக்கவும். நடுத்தரமான தீயில் பாதி வேகும் வரை கிண்டவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, சீரகப் பொடி, வெந்தயப் பொடி, மற்றும் உப்பு சேர்க்கவும். சிறிது வதக்கி எலுமிச்சைச் சாறை ஊற்றவும். 2 நிமிடம்
வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு இறக்கவும். ஆறவைத்து பாட்டில்களில் அடைத்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும், தேவையான போது சிறிய அளவில் எடுத்து உபயோகிக்கவும். தயிர்சாதம், சப்பாத்தியோடு பரிமாறலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...