எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

PULIKKAAYCHAL.. புளிக்காய்ச்சல்..


PULIKKAYCHAL:-
NEEDED :-
TAMARIND - 1 TOMATO SIZE BALL.
SALT - 2 TSP.
RED CHILLI - 5 NOS
CURRY LEAVES -1 ARK
MUSTARD - 1 TSP
URAD DHALL - 2 TSP
CHANNA DHAL - 2 TSP
ASAFOETIDA - 1 INCH PIECE
FENUGREEK 1/2 TSP
TURMERIC POWDER - 1 TSP
FRIED GROUNT NUT CLEANED - 1 TBLSPN
JAGGERY - 1 TSP.
TIL OIL - 1 TBL SPN.

METHOD :-
SOAK TAMARIND AND SALT IN 2 CUPS OF WATER . TAKE THE PULP OUT OF IT. CUT RED CHILLIES AND REMOVE SEEDS. HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL AND CHANA DHAL. , ASAFOETIDA AND FENUGREEK.. WHEN IT BECOMES BROWN ADD CHILLIES AND CURRYLEAVES. ADD THE TAMARIND PUREE WITH TURMERIC .. BRING IT TO BOIL AND ADD JAGGERY WHEN IT BECOMES THICK. STIR OCCASIONALLY . ADD GROUNDNUT WHEN OIL SEPERATES AT SIDES. REMOVE FROM FIRE AND KEEP IT IN AN AIR TIGHT CONTAINER AFTER COOL. WHEN NEEDED ADD TO PLAIN RICE TO MAKE PULI SATHAM.. SERVE THE RICE WITH APPALAM., THEENGAAY THUVIYAL., BOILED EGG., CHIPS.

புளிக்காய்ச்சல்:-
தேவையானவை :-
புளி - 1 தக்காளி அளவு உருண்டை
உப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
கருவேப்பிலை - 1 இணுக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 இன்ச் துண்டு
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை சுத்தம் செய்தது - 1 டேபிள் ஸ்பூன்
தூள் வெல்லம் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :-
புளி., உப்பை இரண்டு கப் தண்ணீரில் ஊறப் போடவும். நன்கு கரைத்து புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.. மிளகாய்களை இரண்டாகக் கிள்ளி விடதை நீக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., கடலைப் பருப்பு., பெருங்காயம்., வெந்தயம் போடவும். அவை சிவந்ததும் மிளகாய்., கருவேப்பிலை போடவும். புளிச்சாறை மஞ்சள்தூளுடன் கலந்து ஊற்றவும். நன்கு கொதிக்க வைத்து கெட்டியாகும் போது வெல்லத்தூள் சேர்க்கவும். அவ்வப்போது கிண்டி விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது வேர்க்கடலையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறிய பின் காற்றுப் புகாத கண்டெயினர்களில் வைக்கவும்.. தேவைபடும்போது சாதத்தில் போட்டு கிளறவும். இத்துடன் பொரித்த அப்பளம், தேங்காய்த்துவையல்., அவித்த முட்டை, சிப்ஸ் சேர்த்து பரிமாறவும்.

6 கருத்துகள்:

  1. எனக்கு ரொம்ப பிடித்தது,இதில் வெல்லம் சேர்த்து செய்ததில்லை...

    பதிலளிநீக்கு
  2. வெல்லம் சேர்ப்பது புதுசா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. Super pulikachal, vellam ithu varaikum add panninathey illa, next time sureaa try pannida vendiyathu than..

    பதிலளிநீக்கு
  4. வாவ் சூப்பர் ரெசிப்பி. . என் தோழி கர்நாடகா அவங்க வெல்லம் சேர்த்து செய்து நான் சாப்பிட்டு இருக்கேன்.
    அந்த டேஸ்டும் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி மேனகா., கீதா., பூங்குழலி., பிரியா., விஜி..:))

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...