எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 மே, 2011

KATHAMBACH CHUTNEY. கதம்பச் சட்னி



KATHAMBACH CHUTNEY:-
NEEDED:-
GRATED COCONUT - 4 TBLSPN
RED CHILLIES - 2 NOS
GREEN CHILLIES - 3 NOS
BIG ONION- 1 NO. CHOPPED
GARLIC - 2 POD
GINGER - 1/4 INCH PIECE
TOMATO - 1 NO
CURRY LEAVES - 4 ARK
CORRIANDER LEAVES - ONE HANDFUL
MINT LEAVES - ONEHANDFUL
TAMARIND - 1 POD
SALT - 1/2 TSP
OIL - 3 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE
FENUGREEK- 1/4 TSP


METHOD:-
HEAT OIL IN A PAN. ADD MUSTARD., WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., CHANNA DHAL., FENUGREEK., ASAFOETIDA. WHEN THE DHALS BECOMES BROWN ADD RED CHILLIES, HALVED GREEN CHILLIES., ONION., SAUTE WELL. ADD TOMATO ., GINGER., GARLIC., CURRY LEAVES., MINT LEAVES., CORRIANDER LEAVES., THEN SALT AND TAMARIND WITH GRATED COCONUT. SAUTE FOR A WHILE . REMOVE FROM HEAT . KEEP ASIDE FOR COOL. AFTER COOLING GRIND IT WELL. ADD WATER FOR THE NEEDED CONSISTENCY. SERVE IT WITH IDDLIES., DOSAS ., MASALACHEEYAM., VELLAIP PANIYAARAM., VADAI., OR WITH RICE AND GHEE., AND WITH CURD RICE AS THEENGKAAY SAMBANTHI.

NOTE:- THIS IS CHETTINAD BASED RECIPE.

கதம்பச் சட்னி:-
தேவையானவை:-
துருவிய தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்
வரமி்ளகாய் - 2
பச்சைமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது.
தக்காளி - 1
இஞ்சி - 1/4 இஞ்ச் துண்டு
பூண்டு - 2 பல்
கருவேப்பிலை - 4 இணுக்கு்
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
புளி - 1 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்.

செய்முறை:-
பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து., கடலைப்பருப்பு போடவும் . இவை சிவந்தவுடன் பெருங்காயம்., வெந்தயம்., வரமிளகாய்., கீறிய பச்சைமிளகாய் ., வெங்காயம் போட்டு வதக்கவும். பின் தக்காளி., இஞ்சி., பூண்டு., கருவேப்பிலை., கொத்துமல்லி., புதினா., உப்பு., புளி., தேங்காய் போட்டு இரண்டு தரம் கிளறி இறக்கவும். ஆறவைத்து அரைத்துத் தேவையான தண்ணீர் சேர்க்கவும். இட்லி., தோசை., மசாலச்சீயம்., வெள்ளைப்பணியாரம்., வடையுடன் பரிமாறவும். அல்லது சாதம் நெய்போட்டு சட்னி போட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.

டிஸ்கி :- இது செட்டிநாட்டு வைபவங்களில் கட்டாயம் இடம்பெறும்.

3 கருத்துகள்:

  1. ரொம்ப சூப்பராக இருக்கு...செய்து பார்த்துவிட்டு வருகிறேன்..

    பதிலளிநீக்கு
  2. ஹாஹா சித்து இங்கே வரும்போது செய்து தரேன்..:)

    செய்து பார்த்தியாடா கீதா..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...