NEEDED:-
DRUMSTICK - 2 CUT INTO 3 INCH PIECES
AUBERGINE/EGGPLANT/BRINGAL - 4 NOS. CUT INTO CROSSWISE.
SMALL ONIONS - 8 NOS PEELED CUT LENGTHWISE
TOMATO - 1 NO DICED
GREEN CHILLIES - 2 SLIT OPEN
BOILED THUVAR DHAL - 1 CUP
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 1/2 TSP
SAMBAR POWDER - 1 TSP
TURMERIC - 1 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 PIECE.
RED CHILLIES - 2 NOSHALVED.
CURRY LEAVES - 1 ARK.
METHOD :-
KEEP DHALL IN A PAN ADD 2 CUPS OF WATER AND ADD DRUMSTICK., AUBERGINE., SMALL ONIONS., TOMATO., TURMERIC., GREEN CHILLIES., ASAFOETIDA., SAMBAR POWDER. COOK TILL THE VEGGIES TENDER. SOAK THE TAMARIND AND SALT IN HALF CUP WATER AND SQUEEZE THE PULP. ADD THIS PULP TO THE BOILED MIXTURE. COOK FOR ANOTHER 3 MINUTES. HEAT OIL IN A IRON LADDLE ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., THEN ADD RED CHILLIES AND CURRY LEAVES AND SEASON THIS IN PACHADI AND SERVE HOT WITH PLAIN RICE OR CURD RICE OR WITH IDDLIES OR DOSAS.
முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி.:-
தேவையானவை:-
முருங்கைக்காய் - 2., 3 இன்ச் துண்டுகளாக நறுக்கவும்.
கத்திரிக்காய் - 4 குறுக்கே கிராசாக நறுக்கவும்.
சின்ன வெங்காயம் - 8 உரித்து நெட்டாக நறுக்கவும்.
தக்காளி - 1 துண்டுகள் செய்யவும்.
பச்சை மிளகாய் - 2 . ரெண்டாக வகிரவும்
வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு
வரமிளகாய் - 2 இரண்டாக கிள்ளிவும்
கருவேப்பிலை - 1 இணுக்கு.
செய்முறை:-
ஒரு பானில் வெந்த பருப்புடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக்காய்., கத்திரிக்காய்., சின்ன வெங்காயம்., தக்காளி., பச்சைமிளகாய்., மஞ்சள் பொடி., சாம்பார் பொடி., பெருங்காயம் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் உப்புடன் கரைத்து காய்கள் வெந்ததும் சேர்க்கவும். 3 நிமிடம் கொதித்து சேர்ந்ததும் ஒரு இரும்புக் கரண்டியில் ( தாளித்துக் கொட்டும் கரண்டி) எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். தாளித்ததை பச்சடியில் கொட்டி சூடாக சாதத்தோடோ., தயிர்சாதத்தோடோ., இட்லி., தோசையோடோ பரிமாறவும்.
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
பதிலளிநீக்கு