எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 22 செப்டம்பர், 2014

புத்தாண்டு, ராமநவமி, பங்குனி உத்திரம் நிவேதனக் குறிப்புகள் NEW YEAR & RAMANAVAMI RECIPES.

இந்த நிவேதனக் குறிப்புகள் ஏப்ரல் 1- 15,   2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1. பாற்சோறு.:-
*************************

தேவையானவை :-
பச்சரிசி - 1 கப்
வெல்லம்+கருப்பட்டி - 2 கப்
தேங்காய் ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்.
தண்ணீர் - 4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-
அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யைச் சேர்த்து இறக்கவும்.
2. மதுவரக்கம்.:-தேவையானவை.
தேங்காய் 1 - துருவவும்.
தூள் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 பொடிக்கவும்.

செய்முறை :- இவை மூன்றையும் கலந்து பூஜைக்கு நைவேத்தியம் செய்யவும்.

3. பால் பழம். :-

தேவையானவை :-
பால் - அரை லிட்டர் வத்தக் காய்ச்சவும்
வாழைப்பழம் - 2 கனிந்தது.
சீனி - 4 ஸ்பூன்
செய்முறை:-
பாலை வத்தக் காய்ச்சி சீனி சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆற விடவும். நன்கு ஆறியதும் வாழைப்பழத்தை உரித்து கைகளால் மசித்துப் பாலில் கரைக்கவும். பூஜை நைவேத்தியமாகப் படைக்கவும்.

4. வேப்பம்பூ வெல்லப் பச்சடி:-

தேவையானவை :-
வேப்பம்பூ - காயவைத்தது 2 கைப்பிடி
பாசிப்பருப்பு - 1 கைபிடி
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 2 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:-
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 இரண்டாக கிள்ளி வைக்கவும்.

செய்முறை :-
பாசிப்பருப்பை வேகவைக்கவும். அதில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும்போது நெய்யில் கடுகு , சீரகம், காய்ந்த மிளகாய், வேப்பம்பூ ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்துப் போடவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும். நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் பச்சரிசி மாவு கரைத்து ஊற்றவும். புதுவருட ஸ்பெஷல் இது. உப்பு, புளிப்பு, கசப்பு இனிப்பு காரம் எல்லாம் கலந்த பச்சடி இது.

5. கந்தரப்பம்.:-
தேவையானவை:-
பச்சரிசி - 2 கப்
புழுங்கல் அரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/8 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 2 கப்
தேங்காய் துருவியது - 1 கப்
ஏலக்காய் - 4 .
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:-
பச்சரிசி.,புழுங்கல் அரிசி., உளுந்தம்பருப்பு., கடலைப்பருப்பு., வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். நைசாக அரைத்து அதில் வெல்லம்., தேங்காய்துருவல்., ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு.

மாவை நன்கு அடித்து ஊற்றினால் நன்றாக வரும்..

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...