கீரைக் கூட்டாஞ்சோறு.
தேவையானவை :- அரிசி – 1 கப், துவரம் பருப்பு – அரை கப், முளைக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை – தலா 1 கைப்பிடி, காய்கறிக் கலவை – 1 கப், ( வாழை, கத்திரி, பூசணி, சேனைக்கிழங்கு , அவரைக்காய் ). சின்ன வெங்காயம் – 5, தக்காளி – 1, புளி – நெல்லி அளவு, சாம்பார் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்க :- வரமிளகாய் – 4, மல்லி – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- கீரைகளை ஆய்ந்து கழுவி வைக்கவும். மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை வறுத்துப் பொடிக்கவும். உப்பு புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி அரிசி பருப்பைக் களைந்து வேகப்போடவும். பாதி வெந்ததும் துண்டாக்கிய காய்கறிக் கலவையையும் மஞ்சள் தூளையும் போட்டு வேகவைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றிப் பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளியை வதக்கி சாம்பார்பொடி, புளித்தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இதை அரிசி காய்கறிக் கலவையில் சேர்க்கவும். கீரைகளையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து குழைய வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து வறுத்துப் பொடித்த மசாலாப் பொடி சேர்த்து இறக்கவும். நெய்யைக் காயவைத்துக் கடுகு, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.