எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இவள் புதியவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இவள் புதியவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 செப்டம்பர், 2014

பலகாரம் பதினொண்ணு இவள் புதியவளில். SNACKS

பலகாரம் பதினொண்ணு

சமையலுக்காக ஒரு வலைத்தளம்  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதன் ஐடி    http://thenoos.blogspot.in . இதை க்ளிக் செய்தால் எல்லாப்  பலகாரங்களின் படங்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு பலகாரத் தலைப்பின் கீழும் இணைப்புக் கொடுத்து இருக்கிறேன்.  செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

1. இலை அடை :-
****************************

http://thenoos.blogspot.com/2010/09/ilai-adai.html
 

தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)

செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும். இதற்குத் தொட்டுக் கொள்ள கதம்பச் சட்னி நன்றாக இருக்கும்.

2. வெஜிடபிள் தூள் பஜ்ஜி:-
***************************************
http://thenoos.blogspot.com/2010/09/veg-thuul-bajji.html  

தூள் பஜ்ஜி:-

தேவையானவை :-
கடலை மாவு - 100 கிராம்.
மைதா - 20 கிராம்
சோளமாவு - 20 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க..
கலவைக் காய்கள் - 1 கப் (மெல்லிய குச்சிகள்) ( கத்திரி., வாழை., உருளை இங்கு உபயோகித்து இருக்கோம்) விரும்பினால்.. வெண்டை., காரட் ., பீன்ஸ் சேர்க்கலாம்..

செய்முறை :-
கடலை மாவு., மைதா., சோள மாவு ., உப்பு ., பெருங்காயப் பொடி., மிளகாய்த்தூள்., ரெட் ஃபுட் கலர்., கலவைக் காய்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிசையவும்.. தண்ணீர் விட வேண்டாம்.. காய்களில் உள்ள தண்ணீர்ச் சத்தே போதும். பானில் எண்ணெயைக் காயவைத்து ஒரு கை நிறைய மாவை எடுத்து உதிர்த்தது போல் தூவிவிடவும்.. நன்கு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து சாஸ்கள் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

3. கல்கண்டு வடை :-
*******************************

http://thenoos.blogspot.com/2010/11/kalkandu-vadai.html 

தேவையானவை:-
உளுந்து - 1 கப்
கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க..

செய்முறை :-
உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. திருமணங்கள்., தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.

4. பீட்ரூட் வடை:-
**************************
http://thenoos.blogspot.com/2011/01/beetroot-vadai.html 

தேவையானவை :-
பீட்ரூட் - 2 ( தோல் சீவி துருவியது).
துவரம் பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது.
வரமிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் துண்டு
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பத்துவிதப் பொங்கல். இவள் புதியவளில். 10 TYPES OF PONGAL

பத்துவிதப் பொங்கல்..

பொங்கல்:-
*******************
1. சர்க்கரைப் பொங்கல்

2. அக்கார வடிசல்

3. கல்கண்டுப் பொங்கல்

4. பாற்சோறு.

 5. மாம்பழப் பொங்கல்

6. அன்னாசிப் பொங்கல்

7. வெண்பொங்கல்

8. தக்காளிப் பொங்கல்

9. காய்கறி வெள்ளைரவைப் பொங்கல்

10. கோதுமைரவைப் பொங்கல்.

***************************************************

1. சர்க்கரைப் பொங்கல்:-
**********************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராஷை - 10
பால் - 1/2 கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
பச்சரிசி, பாசிப்பருப்பை களைந்து குக்கரில் 2 கப் தண்ணீரில் 2 விசில் சவுண்ட் வரும்வரை வேகவிடவும். இறக்கி பாலை சேர்த்து மசிக்கவும். வெல்லத்தை பாகு காச்சி வடிகட்டி பொங்கலில் ஊற்றி நன்கு கிளறவும். நெய்யில் முந்திரி திராஷையை வறுத்து ஏலப்பொடியை சேர்த்து பொங்கலில் கொட்டி கிளறி பரிமாறவும்.

2. அக்கார வடிசல்:-
*******************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 கைப்பிடி
பால் - 6 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 15
திராஷை - 10.
பேரீச்சை - 2 ( விரும்பினால் சேர்க்கலாம்)
கிராம்பு - 2
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை.
ஏலப்பொடி - 1 சிட்டிகை.

புதன், 20 ஆகஸ்ட், 2014

ஹுசைனியின் பேச்சிலர் சமையல் இவள் புதியவளில். HUSSAINAI, BACHELOR COOKING

ஹுசைனியின் பேச்சிலர் சமையல்...


வீட்டில் பெண்களே சமைக்கிறார்கள்.. ஒரு மாறுதலுக்கு ஆண்கள் சமைத்தால் என்ன? வாயில் வைக்க முடியுமா என்கிறீர்களா.. இந்த ஷோவை பார்த்தா அப்பிடி சொல்ல மாட்டீங்க.. நீங்களும் சின்ன பொண்ணா இருந்தப்ப இப்படித்தானே நிறைய பொருளை கெடுத்து கத்துக்கிட்டு இருப்பீங்க.. உங்களை சொல்லச் சொன்னா லிஸ்ட் போட்டு கூட சொல்வீங்க.. உங்க மலரும் நினைவுகளை..

பொதுவா நான் ஆண்கள் கல்யாணக்கூடங்களில் சமைத்து பார்த்திருக்கிறேன். டி வி ஷோக்களில் கூட சமைத்துப் பார்த்திருக்கிறேன்.. சமைத்துப் பார் என புத்தகம் கூட எழுதி இருக்காங்க.. ஆண்கள்.. ஆனா சமையலை இஷ்டப்படியும் செய்யமுடியும்னு ஒரு ஷோ பார்த்தேன்.. நான் அதன் ரசிகை.. அதில் சமைப்பவர் சாதாரண ஆள் இல்லீங்க.. உலகளாவிய கராத்தே மாஸ்டர் ., சிறந்த ஓவியர் வில் வித்தை பயிற்சியாளர்., இசையார்வம் உள்ளவர்,, பன்முகத்திறமையாளர்., ஹூசைனிதான் அவர். எதையும் வித்யாசமா செய்யக்கூடியவர். இந்த ஷோவை அவர் நடத்தும் விதம் உங்களுக்கு எந்த மனநிலை இருந்தாலும் சிரிக்க வைத்துவிடும்.

ஒரு ப்ரெட்டை எடுத்து டோஸ்ட் போட சொல்லிக் கொடுப்பார்.. அது எப்பிடின்னா ஒரு பார் ப்ரெட்டை எடுத்து டேபிள்ல வச்சு டக்., டக்குன்னு வெட்டுவார்.. அதில் கடைசி துண்டுகள் கீழே விழும்.. அப்புறம் அடுப்பைப் பத்தவைக்காமல் தோசைக்கல்லை அதில் வைத்து ப்ரெட் இன்னும் வேகலையே., நாம அடுப்பையே பத்தவைக்கலை என்பார்.. அப்புறம் ஒரு ஷோவில் ஒரு சமையலுக்கு தண்ணீர் தேவைப்படும் . தண்ணீர் ஜாடி காலியாக இருக்கும். பக்கத்தில் ஒரு பைப் இருக்கும். அதை திருகி காண்பித்துவிட்டு இது செட் பைப் . தண்ணீர் வராது என்பார். பின் ஏதோ தண்ணீரை ஊத்தி சமைப்பார்.. இன்று காலை கூட ஒரு மாவை பிசைந்தார்.. பாருங்க.. பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.. என்னது சமைத்தது டேபிளுக்கு வந்துச்சான்னு கேக்குறீங்களா.. அது எதுக்கு .. இந்த சிரிப்பே ஒரு சந்தோஷ உணவுதானே..


அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன் .. எப்பிடி உங்களுக்கு இப்படி ஒரு வித்யாசமான ஷோவை செய்யவேண்டும் என்று தோன்றியது என்று. அவர் சொன்னார்.. சன் டிவியில் ஒரு சமையல் ஷோ செய்ய வேண்டும் என அணுகினார்கள். எனக்கு ஆக்சுவலா கராத்தே தெரியும். பெயிண்டிங் தெரியும்.. ஆனா சமையல் தெரியாது. I DONT KNOW SAMAIYAL.

சன் டிவி ஆரம்பித்த பிரியட் ரமேஷ் பிரபா விஐபி கிச்சன் என்ற ஒரு ஷோவை நடத்த விரும்பினார். அதுக்காக பிரபல சினிமா ஹீரோக்களின் மனைவிகள் சமைக்கும் ஷோவும் அதில் (பெரிய பெரிய ஆக்டர்ஸ் )ஆண் ஹீரோக்களும் மனைவியுடன் சமைக்கும் ஷோவுக்கு( MALE VIP) அணுகினார்கள். அதுக்கு எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்ளவில்லை.. அதுனால என்கிட்ட வந்தாங்க..

நான் சொன்னேன் எனக்கும் சமைக்க தெரியாதேன்னு.. அதுக்கு நாங்க கத்துத்தரோம் அதப்பார்த்து நீங்க சமைங்கன்னு சொன்னாங்க. இது ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி. இத விஜயலெட்சுமி ரமேஷ் நடத்துனாங்க.. பாச்சிலர்ஸ் சமையல்னு பேரு. ஒரு நாள் ஒரு வெஜிடபிள் பர்கர் செய்து காண்பித்தேன்.. செய்து முடித்து டிஸ்ப்ளே செய்திருந்தேன்..


ஒரு முறை நான் காரில் செங்கல்பட்டு வழியாக செல்லும்போது ஒரு குரங்குக்குட்டி அடிபட்டு ரோட்டில் காயத்துடன் கிடந்தது.. அதை என்னுடன் எடுத்து வந்து சிகிச்சையளித்து என் வீட்டில் வளர்த்து வந்தேன்.. NAICHANCHIC னு பேரு .

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

சண்டே ஃபாமிலி ஸ்பெஷல் ஆந்திரா சமையல். இவள் புதியவளில் . ANDHRA CUISINE,

எதேச்சையா ஒரு ஞாயித்துக் கிழமை அன்னிக்கு சீக்கிரமா முழிப்பு வந்துருச்சு. நமக்கெல்லாம் திங்கக்கிழமை அன்னிக்குத்தானே சூப்பரா தூக்கம் வரும். சரின்னு சீக்கிரமா வேலை எல்லாம் முடிச்சாச்சு.. டிவியில் பார்த்த ப்ரோக்ராமே பார்த்த மாதிரி இருந்துச்சு. கம்ப்யூட்டர் லீவு நாள்ல கிடைக்காது.. சரி என்ன பண்ணலாம் பொழுதே போகலையேன்னு யோசிச்சப்ப எதிர் ப்ளாட்டில் இருந்து சரிகமபதநச னு ஒரு சின்னபிள்ளையோட கணீர் குரலோட பாட்டு கேட்டுச்சு.. அட பூஜா.. பாட்டெல்லாமா பாடுறா. அந்த குட்டீஸ்க்கு மிஞ்சி மிஞ்சிப் போனா 5 வயசு இருக்கும். பிரபல பாடகி மாதிரி அற்புதமா பாடினா.. சமையல் வாசனை வேற அவங்க வீட்டில இருந்து மூக்கை துளைச்சுச்சு.. ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவங்க என்ன செய்யிறாங்கண்ணு பார்க்கலாம்னு போனேன்.. அடுத்தவங்க வீட்டுல என்ன செய்யிறாங்கன்னு பார்க்கிறதுன்னா நமக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்..

காலிங் பெல் அடிச்சவுடனே பூஜா உள்ள ஓடிப் போயி.,” அம்மா பாபு அக்கா பிளிசின்னாரு” அப்பிடின்னா.. ( என் தம்பி பாபு நாங்கள் இருந்த வீட்டில் முன்பு இருந்தான். அவன் போன பின்னாடி நாங்கள் வந்து 3 வருடம் கூட ஆச்சு. இருந்தாலும் நான் பூஜாவுக்கு பாபு அக்காதான்..) போய் பூஜா சூப்பரா பாடுறாளேன்னு கேட்டா அவங்க அம்மா கீதா., அவ இப்ப ஸ்லோகம் க்ளாஸ்., பாட்டு க்ளாஸ் எல்லாம் போறான்னு சொன்னாங்க.. அவங்க கிச்சன்ல அடுப்புல ஏதோ ஃப்ரை பண்ணிகிட்டு இருந்தாங்க.. அவங்க கணவர் ரகு அவங்களுக்கு உதவி செய்துகிட்டு இருந்தார். கீதா ப்ரைவேட் கன்சர்ன்ல வேலை பார்க்கிறாங்க. ரகு மாக்ஸ் ந்யூயார்க் லைஃப் இன்சூரன்ஸ்ல வேலை பார்க்கிறார். அவங்க பொண்ணு பூஜா எல் கே ஜி படிக்கிறா.. ரொம்ப சுட்டியான பொண்ணு.

Related Posts Plugin for WordPress, Blogger...